தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். அந்த அளவிற்கு இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கடைசியாக தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பீஸ்ட்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும், இந்த படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் சில தினங்களுக்கு முன்புதான் முடிந்தது. தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும், பட வெளியீடு குறித்து சன் பிக்சர்ஸ் கூடிய விரைவில் அறிவிப்பு அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த மாத இறுதிக்குள் பீஸ்ட் படத்திலிருந்து விஜய் முழுமையாக வெளியேறி விடுவார் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து விஜய் அவர்கள் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், இந்த படம் உணர்வுபூர்வமான கதையாக இருக்கும் என்று வம்சி பைடிபள்ளி ஏற்கனவே பேட்டியில் கூறியிருந்தார். தற்போது இந்த படத்தின் வேலைகள் ப்ரீ புரொடக்ஷன் லெவலில் உள்ளது என்றும், ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் எரோட்டோமேனியா ( Erotomania) நோய் பின்னணியில் எடுக்கப்படுவதாக தகவல் கசிந்துள்ளது. தனக்கு சம்பந்தமில்லாத நபர் தன்னை நேசிப்பதாக கற்பனை செய்து கொள்வது எரோட்டோமேனியா ஆகும்.
இந்த நிலையில் விஜய் ஓய்வெடுக்க தீர்மானித்திருக்கிறார். அதுவரை இந்த மூன்று மாதங்கள் விஜய் தன் குடும்பத்துடன் வெளிநாடு செல்லவும் திட்டமிட்டு இருக்கிறார். பொதுவாகவே விஜய் ஒரு படத்தில் நடித்து முடித்து இன்னொரு படம் நடிக்கும் இடையில் சில தினங்கள் அல்லது ஓரிரு வாரங்கள் தான் ஓய்வெடுப்பார். ஆனால், கடந்த பல வருடங்களாகவே ஒரு படம் முடித்தவுடன் இரண்டு, மூன்று மாதங்கள் ஓய்வு எடுத்து அதற்கு பிறகு தான் அடுத்த படங்களில் நடிக்க தொடங்குகிறார் என்று கூறப்படுகிறது. தற்போது விஜய் தன் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதால் எந்த நாட்டிற்கு போகிறார்? என்று ரசிகர்கள் ஆர்வமுடன் கேட்டு வருகின்றனர்