டிக் டாக்கிலும் கிங் என்று நிரூபித்த தளபதி. தென்னிந்திய நடிகர்களிலேயே இந்த பெருமை இவருக்கு தான் பர்ஸ்ட்.

0
3737
Master
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சொல்லப்போனால் பிற மொழிகளில் கூட இவருக்கு ரசிகர் மன்றம் உள்ளது. கடந்த வருடம் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

-விளம்பரம்-
Vijay

இந்தப் படம் திரைக்கு வர இருக்கும் சமயத்தில் தான் நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்தது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தளபதி விஜய்யை வைத்து ரசிகர்கள் டிக் டாக் என்ற செயலில் செய்த ஹாஸ்டேக் மூலம் இந்தியாவில் பிரபலமான நடிகராக தளபதி விஜய் சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

தற்போது இளைஞர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருக்கும் சமூக வலைத்தளம் என்றால் அது டிக் டாக் செயலி தான். சாதாரண மக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை என அனைவரும் டிக் டாக்கை தான் அதிகமாக பயன்படுத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் இளைஞர்களிடம் அதிகமாக பயன்படுத்தும் இந்த டிக் டாக்கில் தளபதி விஜய் ரசிகர்கள் அதிகமாக ஹாஸ்டேக்கை பயன்படுத்தி உள்ளார்கள். அது எல்லாம் இந்தியா அளவில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது.

மேலும், டிக் டாக்கில் அதிக அளவு ஹாஸ்டேக் பெற்ற இந்திய நடிகர்களில் தளபதி விஜய்யும் ஒருவராக உள்ளார். அதிலும் தென்னிந்திய சினிமாவில் முதல் நடிகராக திகழ்வது தளபதி விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. சல்மான் கான் – 13.7 பில்லியன், விஜய் – 5 பில்லியன், ஷாருக் கான் – 5 பில்லியன், அல்லு அர்ஜுன் – 4.6 பில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-
Advertisement