தாயாரை இதனால் தான் சந்தித்தாரா விஜய் ? அப்போ கூட அப்பா மீதுள்ள கோபம் போலயா ?

0
446
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக விஜய் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி இருந்தது . மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் இந்த படம் வெளியாகி இருந்தது .

-விளம்பரம்-

மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது.

- Advertisement -

லியோ படம்:

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. காஷ்மீர் பகுதியில் சில முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து தற்போது சென்னையில் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விஜய்-பெற்றோர் இடையே சண்டை:

இந்நிலையில் விஜய் தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாகவே விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கும் பிரச்சனை அதிகமாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. விஜய் பெயரை பயன்படுத்தி அரசியல் செயல்களில் ஈடுபட்டதால் தந்தை மீது விஜய் கோபத்தில் இருந்தார். இதனால் தாய், தந்தை இருவரிடமும் விஜய் பேசுவதை நிறுத்திவிட்டார் என்றும், இருவருமே சுத்தமாக பேசிக் கொள்வதே இல்லை என்றெல்லாம் கூறியிருந்தார்கள்.

-விளம்பரம்-

விஜய் குறித்த சர்ச்சை:

அதற்கேற்ப சமீபத்தில் தன்னுடைய 80வது பிறந்தநாளை எஸ் ஏ சந்திரசேகர் கொண்டாடி இருந்தார். அதற்கு கூட விஜய் வரவில்லை என்றும், வாழ்த்து சொல்லவில்லை என்றும் நெட்டிசன்கள் விஜய்யை கடுமையாக விமர்சித்தனர். பின் வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய் தன் பெற்றோர்களை கவனிக்கவில்லை என்று கூறி இருந்தார்கள். இதற்கு விளக்கம் கொடுத்து விஜயின் தாய் சோபா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம்:

இந்த நிலையில் விஜய் தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில், அவர் லியோ படகெட்டப்பில் விஜய் கீழே அமர்ந்திருக்க சோபா மேலே அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் தன்னுடைய பெற்றோர்களின் ஐம்பதாவது திருமண நாளை ஒட்டி எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும், தன்னுடைய பெற்றோர்களின் திருமண நாளை ஒட்டி விஜய் தன்னுடைய தாயுடன் மட்டுமே புகைப்படம் எடுத்திருக்கிறார். இதனால் விஜய்க்கு தன்னுடைய தந்தை மீது கோபம் குறையவில்லையா? வேற ஏதாவது காரணம் இருக்குமோ? என்றெல்லாம் நெட்டிசன்கள் புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்கள்.

Advertisement