பனையூரில் உள்ள அலுவலகத்தில் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய்

0
243
- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் அறிவித்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவர் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்று சில ஆண்டுகளாகவே கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் தான் தமிழக வெற்றி கழகம் என்று விஜய், தன் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். இதனால் நிர்வாகிகள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் உற்சாகம் அடைந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று புதிய செயலையும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.

- Advertisement -

விஜய் அரசியல்:

அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை வரும் 22-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாக கூறியிருந்தார். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலுமே கொடியேற்றும் விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதோடு சில தினங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை பறக்க விட்டு ஒத்திகை பார்த்து இருந்தார். இதனால் சோசியல் மீடியா முழுவதும் விஜயின் கட்சிக் கொடி குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

விஜயின் கட்சி கொடி ஏற்றும் விழா:

மேலும், பனையூரில் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 5000 பேர்களை வைத்து கட்சி கொடியை ஏற்ற பிரம்மாண்டமாக நடத்த போலீசாருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், போலீஸ் அனுமதி தர மறுத்து இருந்தது. இதனால் விஜய், தன் கட்சி அலுவலகத்தில் 250- 300 பேரை மட்டும் வைத்து கட்சி கொடியை ஏற்ற இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய திசை ஆகவும், புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது பெரும் வரம்.

-விளம்பரம்-

விஜய் வெளியிட்ட அறிக்கை:

அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள் தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப்போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலைய செயலகத்தில் அறிமுகப்படுத்தி கழக கொடி பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும், தமிழ்நாடு இனி சிறக்கும், வெற்றி நிச்சயம் என்று கூறியிருந்தார்.

கட்சி கொடி அறிவித்தல்:

இந்நிலையில் இன்று விஜய் அவர்கள் கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை ஏற்றியிருக்கிறார். கட்சிக் கொடியை ஏற்றுவதற்கு முன்பு உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி கொடியை ஏற்றி இருக்கிறார். அந்த கொடியில் போரில் வெற்றி பெற்றால் வீரர்கள் சூடும் மலர் வாகை, பிளிறும் இரு யானை படமும் இடம் பெற்றிருக்கிறது. தற்போது இது தொடர்பான புகைப்படம், வீடியோக்கள் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement