விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்திற்கு அரசியல் கட்சியின் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. படத்தில் சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும் என்று பல்வேறு அமைச்சர்களும் சர்காருக்கு போர் கொடி துக்கியுள்ள நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது. படத்தில் அரசின் விலையில்லா பொருட்கள் எரிப்பது போல சில காட்சிகள் உள்ளது அந்த காட்சிகளை அவர்களாகவே நீக்கிவிட்டால் நல்லது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரித்திருந்தார்.

இதை தொடர்ந்து பல்வேறு அ தி மு க அமைச்சர்களும் சர்கார் படத்தை எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் , சர்கார் படம் குறித்து பேசியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசியுள்ள அவர், ஜெயலலிதா இல்லாதது அனைவருக்கும் குளிர் விட்டு போய் விட்டது. கோமளவல்லி என்ற அம்மாவின் பெயரை வைத்து ஜெயலலிதாவை இழவு படுத்தியுள்ளனர். எத்தனையோ பெயர்கள் இருக்க அம்மாவின் பெயரை பயன்படுத்தியது ஏன்?.ஜெயலலிதா இருந்த போது இதுபோன்ற படத்தை எடுக்கமுடியுமா.

Advertisement

தன்னை விஜய் முன்னிலைபடுத்தும் வகையில் செயலை செய்வது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கொள்கை இலட்சியங்கள் கொண்ட படமாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், சர்கார் அப்படியல்ல. எம் ஜி ஆரை போல யாரும் வரமுடியாது.திரைப்பட குழு மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Advertisement