விஜய்யின் லியோ படத்தின் போஸ்டர் காபி சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
வாழ்க்கை ஒரு வட்டம்…. pic.twitter.com/1o0XsKsPmh
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) June 22, 2023
இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஷ்யாம் போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். குடும்ப பின்னணியை மையமாக கொண்ட கதை. இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது.
பெரும் தோல்வியடைந்த வாரிசு திரைப்படம் :
மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது.
🙄🙄🙄🙄 சுயமா யோசிக்க மாட்டாங்க போல…..விஜய நல்லா ஏமாற்றானுக….
— Vishwa (@vishwagar) June 22, 2023
லியோ படம்:
இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது சென்னையில் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. திட்டமிட்டபடி இந்த படம் வெளியாகவும் இருக்கிறது.
விஜய் திரைப்பயணம்:
இந்த நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதில் கையில் சுத்தியலுடன் இருக்கும் விஜய்க்கு பின்னால் ஒரு ஓநாயும் இடம்பெற்று இருக்கிறது. இந்த போஸ்ட்டர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் பல லட்சம் லைக்குகளை குவித்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட்டர் காபி என்று புதிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது.
அதாவது இந்த படத்தின் போஸ்ட்டர் ஹாலிவுட்டில் வெளியான ‘கேம் ஆப் தாரன்’ சீரிஸ் போஸ்டர் போல இருக்கிறது என்று கேம் ஆப் தாரன் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து கேலி செய்து வருகின்றனர். விஜய்யின் போஸ்டர்கள் இதுபோன்ற கேலிகளுக்கு உள்ளாவது புதிதான விஷயம் கிடையாது. வாரிசு படம் வெளியான போது கூட அந்த போஸ்டர் Otto விளம்பர போஸ்டருடன் ஒப்பிட்டு கேலி செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.