பனைப்பூர் மீட்டிங், மாற்றுத்திறனாளி தொண்டனை கையில் ஏந்தியபடி புகைப்படம் எடுத்த விஜய்.

0
712
vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர்.

-விளம்பரம்-

வாரிசு படம் வெளியாக இருப்பதால் அடிக்கடி தொண்டர்களை சந்தித்து வருகிறாராம் விஜய். கடந்த மாதம் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களையும், தொண்டர்களையும் கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள அந்த இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சந்திக்க விஜய் சென்றுஇருந்தார். விஜயை காண சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் தொண்டர்களும், அவருடைய ரசிகர்களும் குவிந்திருந்தார்கள்.

- Advertisement -

இந்த சந்திப்பில் விஜய் ரசிகர்களுடன் பேசி இருந்தார்.பின் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். மேலும், விஜயின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திஇருந்தது . ஏனென்றால், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல இடங்களில் வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் விஜயின் இந்த திடீர் சந்திப்பு அரசியல்வாதிகளின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து தொண்டர்கள் கூட்டம் மாதம் மாதம் நடைபெறும் என்று விஜய் இயக்கம் சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் இன்றைய தினம் இரண்டாம் கட்டமாக மீண்டும் ரசிகர்களை சந்தித்து இருக்கிறார் விஜய் பனைப்போர் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பில் தொண்டர்கள் அனைவருக்கும் தடபுடலாக பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. அதேபோல இந்த சந்திப்பில் வாரிசு படத்தை வெளி மாவட்டங்களில் மக்களிடம் கொண்டு சேர்க்க என்னென்ன விளம்பர யுக்திகளை செயல்படுத்த வேண்டும் போன்ற முக்கிய ஆலோசனைகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சந்திப்பின் போது விஜய்யுடன் ரசிகர்கள் பலரும் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிலையில் மாற்றுத் திறனாளி ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுக்க முன்வந்தார். அப்போது அந்த ரசிகரை தனது கையில் தூக்கித் தாங்கியபடி புகைப்படம் எடுத்துக்கொண்டார் விஜய். இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement