பொன்னியின் செல்வன்ல விஜய்க்கு பிடித்த விஷயம் இதான் – சரத்குமார் சொன்ன விஷயம்.

0
414
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தில் விஜய்க்கு பிடித்தது இதுதான் என்று சரத்குமார் கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்தினம். இவருடைய படைப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் பொன்னியின் செல்வன். நான்கு ஆண்டுகள் கடுமையான சவால்களை எதிர்கொண்டு, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கும் பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கிறது.

-விளம்பரம்-
ponniyinselvan

மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த படம் தயாராகி இருக்கிறது. மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதோடு படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படம் குறித்த தகவல்:

தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் படத்தை விளம்பரம் செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் உலகம் முழுவதும் துவங்கியிருக்கிறது. தமிழ் சினிமாவில் இதுவரை காணாத அளவிற்கு பொன்னியின் செல்வன் படத்திற்கு டிக்கெட் புக் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் விஜய்க்கு பிடித்த விஷயத்தை குறித்து சரத்குமார் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சரத்குமார் அளித்த பேட்டி:

சில வாரங்களாகவே பொன்னியின் செல்வன் குறித்த வீடியோக்களும், நடிகர்கள் கொடுத்திருக்கும் பேட்டிகளும் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அந்த வகையில் சரத்குமார் அவர்களும் பொன்னியின் செல்வன் படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அப்போது அவர், பொன்னியின் செல்வன் படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த பொன்னி நதி பாடல் தான் தளபதி விஜய்க்கு ரொம்ப பிடிக்கும். அந்த பாடலை தான் அவர் எப்போதும் முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறார் என்று கூறியிருந்தார்.

வாரிசு படம்:

அது மட்டும் இல்லாமல் கார்த்திக் நடித்திருக்கும் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதோடு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் பிசியாக நடிக்கிறார்.

Advertisement