தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதில் விஜய் மக்கள் இயக்கம் சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டார்கள். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டார்கள். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 77 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்நிலையில் தன் மனைவி மயங்கி விழுந்ததால் விஜய் மக்கள் இயக்க பதவியை ராஜினாமா செய்வதாக விஜய் ரசிகர் ஒருவர் அதிரடி முடிவு எடுத்து உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் பெண் நிர்வாகி. விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பெண் நிர்வாகி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஒன்றிய வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றார். இதனை அடுத்து விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் விஜய்யை பார்க்க வைப்பதாக அவரிடம் கூறினார்கள். இதனால் பெண் நிர்வாகியின் சகோதரர் எழில் விஜயை பார்க்க தன் மனைவியுடன் சென்னைக்கு வந்து உள்ளார். விஜயை பார்க்க அவர்கள் நீண்ட நேரமாக வெளியே காத்திருந்தார்கள். நீண்ட நேரமாக விஜய் அலுவலகத்திற்கு வெளியே இவர்கள் காத்திருந்தும் விஜயை பார்க்க அனுமதிக்கவில்லை.

இதையும் பாருங்க : தேசிய அளவில் 7 பதக்கங்களைக் குவித்த நடிகர் மாதவன் மகன் வேதாந்த் – அதுவும் என்ன விளையாட்டில் பாருங்க

Advertisement

பின் விஜய் சந்திப்பதற்காக அதிகாலை 3 மணிக்கு ஆர்வத்துடன் பேருந்தில் ஏறி வந்த தேவி சாப்பிடாமல் இருந்ததாலும், உடல் அசதியாலும், அலுவலகத்தில் ரொம்ப நேரம் காத்திருந்தால் எழிலின் மனைவி திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த ரசிகர்கள் அவரை தண்ணீர் தெளித்து இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தனர். இதனால் ஆத்திரமடைந்த எழில் தனது மனைவி மயக்கம் அடைந்த பிறகு கூட மாநில பொறுப்பாளர்கள் யாரும் வெளியில் வந்து பார்க்கவில்லை என்று கோபமடைந்த விஜய் மக்கள் இயக்கம் ஆம்பூர் மேற்கு ஒன்றிய தலைவர் ராஜினாமா செய்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இது குறித்து எழில் கூறியிருப்பது,

என்னுடைய தங்கை நான் தான் ஆம்பூரில் நிற்கவைத்து வெற்றிபெற செய்தோன். ஆனால், அவரால் வரமுடியாத சூழ்நிலை. அதனால் அவருக்கு பதில் எங்களை வரச் சொன்னார்கள். அதனால் நானும் என் மனைவியை கூட்டிக் கொண்டு வந்தேன். இங்கு வந்தால் வேட்பாளர் வந்தால் தான் உள்ளே விடுவோம் என்று சொன்னார்கள். நாங்களும் காலையில் இருந்து வெளியே ரொம்ப நேரம் காத்துக்கொண்டு இருந்தோம். இதனால் என் மனைவி முடியாமல் மயங்கி விழுந்தார். இதை பார்த்தும் அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. 20 ஆண்டுகளுக்கு மேலாக நான் விஜய் ரசிகராக இருக்கிறேன். இருந்தும் என்ன பயன்? எங்களுக்கு எந்த ஒரு மரியாதையும் இல்லை. எங்களுக்கு இந்த இயக்கமே தேவை இல்லை என்று கூறியிருக்கிறார். இப்படி இவர்கள் கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement