பிக் பாஸில் இருந்து முன்றாவது போட்டியாளராக வெளியேறிய அபிஷேக், பிக் பாஸுக்கு பின் முதல் பதிவு ஒன்றை போட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் இரண்டு வாரத்தை நிறைவு செய்து இறுகிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பல பரிட்சயமான பல போட்டியாளர்களால் கலந்துகொண்டு இருந்தாலும் யூடுயூபில் விமர்சனங்களை பார்க்கும் நெட்டிசன்களுக்கு அபிஷேக் ராஜாவை பற்றி நிச்சயம் தெரிந்து இருக்கும். யூடுயூபில் தன்னை ஒரு அதி மேதாவி போல உணர்ந்து கொண்டு பிரபலங்களிடம் அடிக்கடி மொக்கை வாங்கி வரும் சினிமா பையன் என்று தனக்கே செல்லப் பெயர் வைத்துகொண்ட அபிஷேக்கை அறியாத வலைதள வாசிகள் இருக்க முடியாது.
பொதுவாக பிக் பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு உள்ளே சென்று அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே ஹேட்டர்ஸ்கள் உருவாவார்கள். ஆனால், உள்ளே செல்லும் போதே ஹேட்டர்ஸ்களுடன் சென்றவர் அபிஷேக் தான். அதிலும் இவர் பிக் பாஸில் நடந்து ஒண்ட விதத்தால் பலரும் இவரை மேலும், வெறுக்கத் துவங்கினர். இதுவே இவரது வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது.
இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின் தனது சமூக வலைதளத்தில் முதல் பதிவு ஒன்றை போட்டுள்ள அபிஷேக் ‘பிக்பாஸ் என்பது ஒரு கேம், அதை நான் விதிகளுக்கு உட்பட்டு தான் விளையாடினேன். டாஸ்கின் போது சக போட்டியாளர்களின் போட்டி மனப்பான்மையை என்னால் தூண்ட முடிந்தது. ஏனென்றால் ஒவ்வொரு போட்டியாளர்களுடன் நான் ஒரு வரைமுறையை வகுத்து இருந்தேன.
என்னுடைய வாழ்நாள் அனுபவங்களை இந்த நிகழ்ச்சியில் பணயமாக வைத்தேன். ஆனால், நான் நானாக தான் இருந்தேன் என்ற மன நிறைவுடனே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன். உண்மையாக இருப்பது தான் என்னுடைய மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றால் இப்படித்தான் நான் என்னுடைய நிகழ்ச்சிகளையும் என்னுடைய வாழ்க்கையும் ஓட்டுவேன் என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால், அபிஷேக்கின் இந்த பதிவையும் நெட்டிசன்கள் வச்சி செய்து வருகின்றனர். பிக் பாஸில் இருந்த போதே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என்று கூறி இருந்தார். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசிய வீடியோ வைரலானது. மேலும், இந்த சீசனில் மது தான் லாஸ்லியா, நாடியா தான் வனிதா என்றெல்லாம் பேசி இருந்தார். இதனை கமலே சுட்டிக்காட்டி கலாய்த்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இதையெல்லாம் குறிப்பிட்டு ‘எந்த ஷோவ பத்தி கேவலமா பேசி கைதட்டு வாங்கனீயோ.. அங்கேயே போக வச்சிட்டார் கடவுள் கொஞ்சம் கூட கூச்சம் நாச்சமில்லாம நீயும் போயிட்டு வந்த பார் என்று ட்விட்டர் வாசி ஒருவர் கேலி செய்துள்ளார். மேலும், சிலர் நீ வெளியே வரவில்லை நாங்கள் தான் உங்களை தூக்கி எரிந்துவிட்டோம் என்று கூறி வருகின்றனர்.