உள்ளாட்சி தேர்தல், அரை சதத்திற்கு மேல் அடித்த விஜய் மக்கள் இயக்கம். (விஜய் அரசியலுக்கு செம அடித்தளம்)

0
2369
- Advertisement -

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் 77 இடங்களில் வெற்றி பெற்று அரசியல் வட்டாரத்திற்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ள சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் சில மாதங்களாகவே உள்ளாட்சித் தேர்தல் குறித்து பல செய்திகள் சோசியல் மீடியாவில் வந்தது அனைவருக்கும் தெரியும். அதிலும் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.

-விளம்பரம்-

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு பல கட்சி சார்பில் வேட்பாளர்கள் களத்தில் இறங்கி இருந்தனர். இவர்கள் தேர்தல் குறித்து பல பிரச்சாரங்களும் செய்து வந்தனர். அதில் விஜய் மக்கள் இயக்கம் சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டார்கள். இது குறித்து கூட விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் நிறைய கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பேச்சு வார்த்தை இல்லாமல் பிரிவில் உள்ளது அனைவருக்கும் தெரிந்தது.

- Advertisement -

மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டார்கள். மேலும், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 74 மையங்கள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 77 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். இதை விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மகிழ்ச்சியுடன் அறிவித்து உள்ளார். இப்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு எழுபத்தி ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்துள்ளது.

Image

இவர்கள் முதலமைச்சர் பதவிக்கு போட்டி போட்டால் அவ்வளவு தான் தலையில் துண்டை போட்டுக் கொண்டு போக வேண்டும் என்று கூறும் வகையில் தற்போது அரசியல் வட்டாரத்தில் நிலவரம் நிலவி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் காஞ்சிபுரம் மாவட்டம் வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட பிரபு என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 169 பேரில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என இன்று விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-
Advertisement