தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் மழை பெய்ததால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் செய்திகள் தான் பகிரப்பட்டு வருகிறது. மிக்ஸாம் புயல் சென்னையே புரட்டி போட்டு இருந்தது. தற்போது அந்த நிலை மாறி மக்கள் தங்களுடைய இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் அதிகமாக கனமழை பெய்திருக்கிறது. இதுவரை வரலாறு காணாத வெள்ளத்தால் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

Advertisement

விஜய் நல திட்டம்:

இந்த நிலையில் தூத்துக்குடி மற்றும் நெல்லை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் இன்று நேரில் சென்று நலத்திட்டங்களை வழங்கி இருக்கிறார். இந்த நலத்திட்டங்களை வாங்குவதற்கு 400க்கும் மேற்பட்ட மக்களை தூத்துக்குடியில் இருந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் திருநெல்வேலிக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.. தூத்துக்குடியில் சுமார் 27 வேன்கள் மூலம் விஜய் மக்கள் இயக்கத்தினர் சென்று இருக்கிறார்கள்.

மிக்ஸாம் புயல்:

ஏற்கனவே மிக்ஸாம் புயலின் போது சென்னை மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. அப்போது விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தின் மூலம் கட்டளை போட்டு தங்களால் முடிந்த அளவிற்கு பாதிக்கப்பட்ட அனைவருக்குமே உதவி செய்திருந்தார்கள். ஆனால், இந்த முறை நேரடியாக விஜய் களத்தில் இறங்கி இருப்பது அரசியலுக்கு வருவதற்கான ஒரு படி தான் என்று கூறப்படுகிறது.

Advertisement

விஜய் அரசியல்:

அதேபோல் ஏற்கனவே பத்தாம், 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய், அவர்களை கௌரவித்து பரிசளித்து உணவளித்து மாணவர்களுக்கான அறிவுரையும் கூறி இருந்தார். இதற்கு பலருமே விஜய்யை பாராட்டி இருந்தார்கள். இப்படி அடிக்கடி விஜய் மக்கள் இயக்கத்தினர் மக்களுக்காக உதவி செய்து வருவதால் அடுத்து நடக்கும் முதல்வர் தேர்தலில் விஜய் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

Advertisement

தடுக்கி விழுந்த தளபதி :

இப்படி ஒரு நிலையில் இந்த விழாவிற்கு விஜய் அரங்கிற்குள் வர கதவு வழியாக வந்த போது அங்கே வெளியில் இருந்தவர்கள் சிலர் உள்ளே வரைப்பார்த்தனர். இதனால் விஜய் உள்ளே நுழையும் முன்பே புஸ்ஸி ஆனந்த் பக்கத்தில் இருந்த நபர் கதவை சாத்தினார். இதனால் விஜய் முதுகில் கதவு பட்டு அவர் நிலை தடுமாறி கீழே விழ பார்த்தார். இதனால் பதறிய புஸ்ஸி ஆனந்த், கதவை முடிய அந்த நபரின் முதுகில் ஓங்கி தாக்கி ‘ பாத்து மூட மாட்டியா’ என்று கோபத்தில் கத்தினார்.

Advertisement