நாளை நடைபெற உள்ள மாஸ்டர் இசை வெளியிட்டு விழாவை தொகுத்து வழங்க போவது யாரு தெரியுமா ?

0
2725
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார்.
இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
master

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி இருந்தது. இந்த பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. சில காலமாகவே சமூக வலைத்தளங்களில் டாப் ட்ரெண்டிங்கில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா தான் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15 ஆம் தேதி ஹோட்டல் லீலா அரண்மனையில் நடைபெறுகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவை சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறார்கள். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரபல தொகுப்பாளினி பாவனா, மிர்ச்சி விஜய் தான் நடத்தப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Image result for mirchi vijay

-விளம்பரம்-

இதற்கு முன்னாடி விஜய் நடித்த பிகில் படத்தை தொகுப்பாளினி ரம்யா தொகுத்து வழங்கி இருந்தார். ஆனால், அவர் இந்த மாஸ்டர் படத்தில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விழாவில் பிரபலங்கள், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டும் கலந்து கொள்ளுவதாக தகவல் தெரியவந்து உள்ளது. ஏனென்றால் சமீப காலமாக விஜய் படங்கள் என்றாலே பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் வருகிறது.

இந்த கரோனா வைரஸ் பிரச்சினை உலகம் முழுவதும் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சில மாதங்களாக இந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள 24 நாடுகளில் பரவி பீதியை கிளப்பி வருகிறது . இந்த கரோனா வைரஸினால் 50,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது.

Image result for Vj Bhavana

இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தான் மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழா ரசிகர்கள் இல்லாமல் நடத்தப் படுகிறது. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளார்கள். மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் கண்டிப்பாக திரையரங்கிற்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றன.

Advertisement