லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் வசூலிலும் சாதனை படைத்தது. 10 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது. இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜனவரி 29 ஆம் தேதி இந்தியா உட்பட 240 நாடுகளில் வெளியாக இருப்பதாக அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இதையும் பாருங்க : பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படம் – இவங்க மட்டும் மிஸ்ஸிங். காரணம் இதுவா தான் இருக்கும்.

Advertisement

ஏற்கனவே கொரோனா அச்சம் காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் தான் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பதால் திரையரங்க உரிமையாளர்கள் இந்த திரைப்படத்தை இன்னும் சில நாள் ஓட்ட திட்டமிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை OTT வெளியிட்டுள்ள முடிவு திரையரங்க உரிமையாளர்களை கொஞ்சம் அதிருப்த்தியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளதாவது,

அமேசானில் இப்படி படம் வெளிவருவதால் பலரையும் சென்றுசேரும் ‘மாஸ்டர்’தியேட்டரில் ரிலீஸ் செய்ய வாய்ப்பு கிடைக்காத பகுதிகளில் இருக்கும் பலரும் மாஸ்டரை பார்க்க முடியும். அதே போல விஜய் இதுகுறித்து கூறியுள்ளது, இந்தியா மற்றும் உலகளவில் உள்ள ரசிகர்கள் பலரும் இந்த படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் கண்டு மகிழலாம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.

Advertisement

ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் திரையரங்குகளில் வெளியான வெறும் 16 நாட்களில் வெளியாவது இதுவே முதல்முறை. ‘மாஸ்டர்’ தியேட்டரில் ரிலீஸாகி 45 நாள்களுக்குப்பிறகுதான் ஓடிடியில் வெளிவரும் என முன்னர் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை புரிந்துகொண்டு இருக்கும் நிலையில் OTT யில் வெளியானால் படத்தின் வசூலும் பாதிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Advertisement
Advertisement