லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் இன்று (ஜனவரி 13) வெளியாகியுள்ளது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் இன்று இந்த படம் வெளியாகியுள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் தான் அனுமதிக்கபடுகின்றனர்.
இருப்பினும் பல்வேறு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் அனுமதிக்கப்பட்டு இருந்தன. இந்த படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே போல ஒரு சிலரோ இந்த படத்தில் விஜய்யை விட விஜய் சேதுபதக்குி தான் படு மாஸ் ஏற்பட்டுள்ளது என்றும் கூறி வருகின்றனர். இருப்பினும் விஜய் இறுதியாக நடித்த சர்க்கார், பிகில் போன்ற படங்களில் கொஞ்சம் சறுக்கலை கொண்டிருந்தார். ஆனால், இந்த படம் அந்த சறுக்கலில் இருந்து விஜய்யை மீட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த படத்தில் நடிகர் விஜய் முதல் பாதியில் குடிக்கு அடிமையாகி இருப்பார். மேலும், ஏன் இப்படி குடிக்கிறீர்கள் என்று யாவராவது கேட்டால் அதற்கு ஒவ்வொரு முறையும் ஒரு காரணம் சொல்லுவார். ஒரு சமயம் கமல் நடித்த புன்னகை மன்னன் கதையையும், ஒரு சமயம் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் கதையையும் சொல்லும் விஜய் ஒரு சமயத்தில் அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை படத்தின் கதையை சொல்லுவார்.
கமல், மற்றும் சூர்யா நடித்த படத்தின் கதைகளை சொல்லும் போதுவிட அஜித் நடித்த காதல் கோட்டை படத்தின் கதையை பற்றி விஜய் சொல்லும் போது தான் திரையரங்கில் விசில் சத்தம் அதிகம் பறக்கிறது. தமிழ் நடிகர்கள் நடித்த படங்களை பற்றி மட்டுமல்லாமல் மலையாளத்தில் வெளியான பிரமேம் படத்தின் கதை ஹாலிவுட்டில் வெளியாகி இன்றும் ஒரு காதல் காவியமாக இருக்கும் படத்தின் ரெபரென்ஸ் வரை இந்த படத்தில் இடம்பெற்றள்ளது.