போலீஸிடம் அடி, தளபதியே வேண்டாம் என்று புலம்பிய ரசிகர்கள் – குறையை தீர்த்து வைத்த விஜய்.

0
173
varisu
- Advertisement -

பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடமும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-
varisu

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடித்தானது தெலுங்கானாவில் முடிந்த பிறகு தற்போது சென்னைக்கு இறுதி கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளனர் இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் 500க்கும் மேற்பட்டோர் விஜயை காண ஆவலுடன் அப்பகுதிக்கு வந்தனர்.ஆனால் படப்பிடிப்பு பகுதியில் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் ரசிகர்களை விரட்டி அடித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் போலீசருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

-விளம்பரம்-

நாங்கள் இவ்வளவு பண்றது எதுக்கு, எங்க தளபதியை பார்க்க தானே. இப்படி பண்ணா எங்களுக்கு தளபதியே தேவையில்லை. சூர்யா, ரஜினி வந்த மட்டும் அவரது ரசிகர்களை பார்க்க அனுமதிக்கிறாங்க. ஆனால், விஜய் வந்தா மட்டும் இப்படி பண்றாங்க என்று ஆதங்கத்தை புலம்பி தள்ளியுள்ளனர். மேலும், சூர்யா ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர்கள் அழைத்தது பெயரிலே பாதுகாப்புக்கு வந்த தங்களை பாதுகாப்பு ஆட்கள் தாக்க முற்படுவதாக வன்மையாக கண்டிக்கிறோம் எனக் கூறினர்.

இதற்கிடையே ரசிகர்கள் அதிக அளவு கூடியதால் அப்பகுதி சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது.இந்தநிலையில், நேற்று சூட்டிங் முடிந்து விஜய் வீட்டுக்கு செல்லும்போது, ரசிகர்கள் ஏராளமானோர் விஜயை பார்க்க காத்திருந்தனர். இதனையடுத்து விஜய் காரில் இருந்து இறங்கி ரசிகர்களைச் சந்தித்தார். விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் காட்சியளித்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அதனை வீடியோவாக பதிவு செய்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியோடு பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement