ப்ளூ சட்டையிடம் சம்பளம் இல்லாமல் பணிபுரிய தயார்.! ட்வீட் செய்த விக்ரம் பட இயக்குனர்.!

0
665
- Advertisement -

தரமான படமோ, சுமாரான படமோ தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் விமர்சனம் செய்து வரும் ப்ளு சட்ட மாறன், இப்போது புதியப் படம் ஒன்றை இயக்க இருப்பதாக அறிவித்துள்ள விஷயம் ரசிகர்களுக்கு பெரும் ஷாக்காக அமைந்தது.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் வெளியாகும் நல்ல படங்கள் பற்றி கூட இவர் தவறாக விமர்சித்துள்ளார் என ஏற்கனவே சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். சமீபத்தில் பிரபு தேவா இயக்கத்தில் வெளியான சார்லி சாப்ளின் படத்திற்கு நல்ல விமர்சனத்தை சொல்ல வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் மிரட்டியதாக கூட ஒரு சர்ச்சை எழுந்தது. 

இதையும் படியுங்க : கமல் கிரிக்கெட் விளையாடி பார்த்திருக்கீறீர்களா.! ஐபிஎல் நேரத்தில் வைரலாகும் சுவாரசியமான விஷயம்.! 

- Advertisement -

இந்த நிலையில் மாறன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய படம் ஒன்றை இயக்கபோவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார் மாறன். இப்படத்தில் நடிக்க விரும்புபவர்கள் தங்களுக்கு புகைப்படங்களை மின்னஞ்சல் செய்யலாம் என்றும் மே 13 முதல் தங்களை நேரில் சந்திக்கலாம் என்றும் அறிவித்திருந்தார்.

மாறனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழில் கோலிசோடா, விக்ரம் நடித்த 10 எண்றதுக்குள்ள போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் மில்டன், சமீபத்தில் தனது ட்விட்டெர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, மாறன்sir படம் இயக்கவிருப்பது மிக்க மகிழ்ச்சி. அதில் ஒளிப்பதிவாளராகவோ,உதவி இயக்குனராகவோ அவரின் தரத்துக்கும் கருத்துக்கும் நான் ஒகே என அவர் நினைத்தால் work பண்ண தயாராக இருக்கிறேன்.கற்றுக்கொள்ளலாம் எனத்தோன்றுவதால். சம்பளம் இல்லாமல் கூட பணியாற்ற தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement