தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இரண்டு மாபெரும் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர். எந்த நடிகர் நடிகைகளுடன் பேட்டி எடுத்தாலும் இவர்களை பற்றிய கேள்வி இடம்பெறாமல் இருக்காது. அந்த வகையில் பிரபல நடிகையான இஷா கோபிகர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் விஜய் மற்றும் அஜித் குறித்து கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
தமிழில் 1998-ஆம் ஆண்டு வெளியான பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இஷா கோபிகர். தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நாயகி என்ற பிலிம்பேர் விருதினை பெற்றார் .அதன் பின்னர் அரவிந்த்சாமி உடன் எ’ன் சுவாசக்காற்றே’ படத்தில் நடித்திருந்தார். மேலும், இவர் விஜய் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான ‘நெஞ்சினிலே ‘படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்
விஜயகாந்த் நடித்த ‘நரசிம்மா’ படத்திலும் நடித்துள்ளார் தமிழில் இவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இந்தியில் இவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்தி திரையுலகில் கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இஷாகோபிகர் விஜயுடன் நெஞ்சினிலே படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசி இருந்தார். அப்போது பேசிய அவர் நான் நடித்த நடிகர்கள் பலர் என்று சினிமாவில் ஸ்டார் நடிகர்களாக உள்ளனர்.
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் மற்றும் அரவிந்த்சாமி ஒரு நல்ல இடத்தில் உள்ளனர். அவர்கள் இருவருமே என்னுடைய பேவரிட் நடிகர்கள்.அதிலும் விஜய் ஒரு மிகப்பெரிய இடத்தில் உள்ளளார். மேலும், நான் அஜித்துடன் நடிக்க வில்லை என்றாலும் அவர் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அவருக்கு விஜய் அளவிற்கு பெயர் உள்ளதா என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார் இஷா கோபிகர்.