டூ பீஸ் நீச்சல் உடையில் இருக்கும் 80ஸ் நடிகையின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 80,90 காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யுவராணி. இவர் அழகன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் .அதனை தொடர்ந்து இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் விஜய்க்கு ஜோடியாக செந்தூரபாண்டி என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும், இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களில் கூட நடித்துள்ளார்.
பின் சினிமாவில் மவுஸ் குறை தொடங்கிய உடன் இவர் சின்னத்திரை நோக்கி களம் இறங்கிவிட்டார். பொதுவாகவே சினிமாவில் கதாநாயகிகளுக்கு வாய்ப்புகள் குறைந்த உடன் சின்னத்திரையில் தான் தங்களுடைய மீதி காலத்தைத் தள்ளுகிறார். அதில் யுவராணியும் விதிவிலக்கல்ல. இவர் பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சித்தி என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மத்தியில் பிரபலமானார்.
இதையும் பாருங்க : பாக்கியராஜா இது ? வைரலாகும் சூப்பர் ஸ்டைலிஸ்ட் போட்டோ ஷூட். Gvm பட ரேஞ்சுக்கு இருக்காரே. (இந்த போஸ விடமாட்டார் போல)
இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனதை விட தொடர்புகளின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்றே சொல்லலாம். பெரும்பாலும் இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து இல்லத்தரசிகளின் வயிற்று எரிச்சலை வாங்கி கொள்கிறார். அந்த அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் பிரபலமாகி வருகிறது. இது ஒரு பக்கமிருக்க இவருடைய குடும்ப வாழ்க்கையைப் பார்த்தால் இவர் ரவீந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஸ்பா அண்ட் பியூட்டி பார்லர் துறையில் இருக்கிறார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
பெரியவன் விஷ்ணு, சின்னவன் நித்தியன். தற்போது இவர் சின்னத்திரையிலும், சினிமாவில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் டூ பீஸ் நீச்சல் உடையில் இருந்த பழைய புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இது இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம். இதனை பார்த்து நிஜமாகவே இது தான் நடிகை யுவராணியா! என்று வாயடைத்துப் போய் கேட்டு வருகிறார்கள். மேலும், இதை நெட்டிசன்கள் லைக் செய்தும், அதிகமாக ஷேர் செய்தும் வருகிறார்கள்.