விஜய் பிறந்தநாளுக்கு இப்படி ஒரு கொண்டாடமா.! பிரபல திரையரங்குகள் அறிவிப்பு.!

0
299
Vijay

தமிழ் சினிமாவால் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வரும் இளைய தளபதி விஜய்க்கு இருக்கு ரசிகர்கள் பட்டாளம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இவரது ரசிகர்கள் சிலர் விஜயை கடவுளாக கூட எண்ணுகிரார்கள். அதே போல விஜயை பல ரசிகர்கள் தங்களது வீட்டின் ஒருவராகவே எண்ணி விடுகிறார்கள் போல.

தற்போது விஜய் அட்லீ இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்க : விஜய் அஜித்திற்கு போட்டியாக ஹீரோவாக களமிறங்க போகும் லெஜண்ட்.!

- Advertisement -

பொதுவாக விஜய்யின் படங்கள் வந்தால் பாலபிஷேகம் செய்வது, பேனர்கள் வைப்பது என்று ரசிகர்கள் செய்வது வழக்கம். அதே போல தாங்கள் பயன்படுத்தும் கார், பைக், ஆட்டோ வாகனங்களில் விஜய்யின் புகைப்படத்தை அச்சிடிப்பதை கூட பார்த்திருக்கிறோம். அதிலும் விஜய்யின் பிறந்தநாள் என்றால் சொல்லவா வேண்டும்.

விஜய்யின் பிறந்தநாள் வருகிற 22 ஆம் தேதி வருகிறது. இதற்காக விஜய் ரசிகர்கள் இப்போதே பல ஹாஸ் டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி விஜய் படத்தை திரையிட இருக்கின்றனர்.

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான வெற்றி திரையரங்கில் விஜய்யின் போக்கிரி திரைப்படத்தையும், ரோகினி திரையரங்கில் விஜய்யின் ‘கத்தி ‘ திரைப்படத்தினையும் விஜய்யின் பிறந்தநாளுக்காக திரையிட உள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.