அண்ணா, நடிகர் விஜய் வீடு அங்க தான் இருக்கா ? அட்ரஸ் கேட்டு பல்ப் வாங்கிய விஜய். அறிய வீடியோ இதோ.

0
2853
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் தளபதி என்ற அந்தஸ்துடன் பூச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். விருது விழாக்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாக்கள் என்று தவறாமல் விஜய் கலந்து கொண்டு விடுகிறார். ஆனால், தனிப்பட்ட முறையில் நடிகர் விதை போட்டியில் பங்கேற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது வேண்டுமானால் நடிகர் விஜய் அவ்வளவாக தொலைக்காட்சிப் பேட்டிகளில் பங்கு கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் விஜய் பல தொலைக்காட்சி பேட்டிகளில் பங்கேற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய், ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக் ஒட்டி சென்று தன்னுடைய வீட்டின் விலாசத்தையே மக்களிடம் கேட்ட வீடியோ ஒன்று வைரலாக பறவி வருகிறது. அந்த வீடியோவில் சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு சிலரிடம் தனது பைக்கை நிறுத்தி தனலட்சுமி அவென்யூ கஸ்தூரிபாய் நகர் எங்கே இருக்கிறது என்று விஜய் கேட்கிறார் அதற்கு காரணம் நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன்னர் அங்கே தான் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : ஒரு அண்ணன் அரசியல் வாதி இன்னொருத்தர் சர்ஜன். அனுஷ்காவின் இரண்டு அண்ணன்களை பார்த்துள்ளீர்களா ?

- Advertisement -

அட்ரஸ் கேட்டது விஜய் என்று தெரியாமல் பேசும் அந்த நபர்களும் அந்த விலாசத்திற்கு செல்லும் வழியை கூறுகிறார்கள் அதற்கு நன்றி தெரிவித்த விஜய் தன்னுடைய பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பும்போது அண்ணா நாங்க தான் நடிகர் விஜய் இருக்கிறாரா என்று அவரிடம் கேட்க அதனால் அங்கு தான் இருக்கிறாரா என்பது தெரியாது என்று கூறி பல்ப் கொடுத்து விடுகிறார், பின்னரும் விஜய்யும், தான் விஜய் என்பதை காட்டிக்கொள்ளாமல் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தில் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலிப் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவலை தவிர மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக தகவல் கசிந்திருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement