ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதி ! நடிகரின் தம்பிக்கு பிரியாணி ! தளபதி விஜய்யின் சிம்ளிசிட்டி

0
3789
Actor vijay
- Advertisement -

நடிகர் விஜய் படப்பிடிப்பு தலங்களில் மிகவும் அமைதியாக இருப்பார் என்று பலர் கூறி நாம் கேட்டிருக்கிரோம்.ஆனால் உண்மை அதுவல்ல என்று விஜய் படத்தில் நடித்த பிரபல வில்லன் நடிகர் ஒருவர் கூறியிருக்கிறார்.வில்லன் நடிகர் மீம் கோபி மெட்ராஸ், மாரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும் விஜய் நடித்த பைரவா படத்தில் கூட அவருக்கு வில்லனாக ஒரு காட்சியில் நடித்திருப்பார்.சமீபத்தில் இவர் விஜயுடன் பைரவா படத்தில் நடித்த சுவாரசியமான அனுபவம் ஒன்றை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளாளர்.

vijay

இது பற்றி அவர் தெரிவிக்கையில் நடிகர் விஜய் மிகவும் அமைதியானவர் மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டார் என்று பலரும் கூறியிருந்தனர் அதனால் நானும் அவர் அப்படித்தான் என்று நினைத்திருந்தேன்.பைரவா படத்தின் ஷூட்டிங்கின் போது விஜயை சந்தித்த போது நான் அவரிடம் நீங்கள் ஏன் எப்போதும் அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்டான் அதற்கு விஜய் என்ன செய்வது அப்டியே பழகிவிட்டது என்று சற்று சிரித்தபடியே கூறினார்.

- Advertisement -

நான் மேலும் எனது தம்பி உங்களது மிக பெரிய ரசிகர் என்று கூறியவுடன் விஜய் சார் ஓ அப்படியா அப்போது நாளை வரும்போது உங்களது தம்பியையும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்து வாருங்கள் என்று கூறினார்.

அடுத்த நாள் அவர் கூறியதற்கு நானும் என்னுடைய தம்பியை ஷூட்டிங்கிற்கு அழைத்து சென்றேன்.அப்போது விஜய் சார் என்னுடைய தம்பியுடன் சுமர் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

Actor Mime Gopi

பின்னர் இறுதியாக எங்களை வழியனுப்பிய போது என்னுடைய தம்பி விஜய்யிடம் எப்போ சார் ட்ரீட் வைக்க போறீங்க என்று கேட்டதற்கு உனக்கு பிடித்த பிரியாணி வாங்கித்தறேன் என்று கூறினார் விஜய் என்று தெரிவித்திருந்தார் மீம் கோபி.

Advertisement