ரிலீஸ் நெருங்கும் வேலையில் சிக்கலை சந்திக்கும் பிகில்.! முதல்வரை ரகசியமாக சந்திக்கும் விஜய்.!

0
3050
vijay-edapadi
- Advertisement -

தளபதியின் விஜய் அவர்களின் ‘தலைவா’ படம் 2013இல் திரையுலகிற்கு வெளிவந்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் அரசியல் சம்பந்தமான கருத்து உள்ளது எனவும்,படம் வெளியிட கூடாது என்று அதிமுக கட்சியினர் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தார்கள். பின்னர் சமாதானமாக பேசி ஒரு சில காட்சிகளை நீக்கிவிட்டு தியேட்டர்களில் வெளியிட்டார் இயக்குநர் ஏ எல் விஜய். அதன் பிறகு சில காலமாகவே அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் வேண்டாம் என முடிவு செய்து தன்னுடைய வேலை பார்த்து வந்தார் விஜய். தற்போது அரசியலில் களமிறங்கி விட்டார் என கூறிவருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

-விளம்பரம்-
Image result for bigil audio launch vijay speech

சமீபத்தில் தனியார் கல்லூரியில் நடந்த பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் அவர்கள் அரசியல் குறித்து விமர்சனம் செய்திருந்ததால் அதிமுக கட்சியினர் கடுப்பாகி விட்டனர் என தகவல்கள் வெளிவந்தன.மேலும், அவர் மேடையில்” யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, அங்கு உட்கார வைத்தால் நல்லது” என கூறிய கருத்து ரசிகர்கள் இடையே வரவேற்பையும், அரசியல் வாதிகளிடம் வெறுப்பையும் சம்பாதித்து. விஜய் அவர்களின் பேச்சைக் கேட்டு ஆளும் கட்சி காண்டாகி உள்ளனர். அது மட்டும் இல்லைங்க விஜய் அவர்களின் பேச்சால் பிகில் படம் திரையரங்குக்கு வெளிவர சர்ச்சைகளை ஏற்படுத்துவதற்கான நாச வேலைகளை செய்து வருகின்றார் என அதிமுக அரசு கூறியது.

இதையும் பாருங்க : பிக் பாஸின் முதல் சீசன் தான் பெஸ்ட்.! காரணத்துடன் சொன்ன முதல் சீசனின் பிரபல போட்டியாளர்.!

- Advertisement -

மேலும், படக்குழுவினரும், திரையரங்கு உரிமையாளர்களும் அரசாங்கத்தை எதிர்த்து பகைத்துக் கொள்ளக்கூடாது என எண்ணுகிறார்கள் என்ற தகவல் வெளிவந்தன. இதற்கு அடுத்தகட்டமாக படக்குழுவினர் ஆலோசனைகள் நடத்தி வருவதாக தகவல் வெளியானது. அது மட்டும் இல்லைங்க சென்சார் ரேட்டினில் ஆளும் கட்சி தங்களுடைய வேலையை செய்துள்ளது. நேற்று வரை சென்சார் பட்டியலில் பிகில் படம் வரவில்லை என அறிவித்தார்கள். இதனை அறிந்த நடிகர் விஜய் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் உதவி கேட்டிருந்தார். ஆனால், ரஜினிகாந்த் நமக்கு எதுக்கு இந்த அரசியல் பிரச்சனை எல்லாம் என தலையிடாமல் ஒதுங்கி விட்டார் என்ற தகவல்கள் வெளிவந்தன.

-விளம்பரம்-

இதனால் விஜய் அவர்கள் மனமுடைந்து போய் உள்ளார் என்றும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆனதால் தன்னுடைய கவுரவம் இருக்கிறது என்றும் சொல்லி வந்தார். அதனால் எப்படியாவது படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று நினைத்து தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி அவர்களை சந்தித்து சமாதானம் பேசுவதாக கூறியுள்ளார் மேலும், இவர்களுடைய சந்திப்பு மிக ரகசியமாக இருக்க வேண்டுமெனவும் திட்டமிட்டுள்ளார். ஆகமொத்தம் எடப்பாடி அவர்கள் மனம் வைத்தால் தான் பிகில் படம் தியேட்டர்களில் கொடிகட்டி பறக்கும் எனக் கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

இதனை தொடர்ந்து தலைவா படம் வந்த உடனே பிரச்சனையாகி வந்தது.ஆனால், உடனே அதற்கான இணையங்களில் தலைவா என்ற ஹஸ்டக் ஒன்றை உருவாக்கி படம் குறித்த தகவல்களை பதிவு விட்டு வந்தனர் ரசிகர்கள். மேலும் பிகில் படம் பிரச்சினை சம்பந்தமாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும்,பிகில் படம் திரையரங்குக்கு வருமா? வராதா? என பதட்டத்திலும் சோகத்தில் உள்ளனர் ரசிகர்கள் என்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Advertisement