பிக் பாஸின் முதல் சீசன் தான் பெஸ்ட்.! காரணத்துடன் சொன்ன முதல் சீசனின் பிரபல போட்டியாளர்.!

0
25196
bigg-boss-1
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 105 நாட்களாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஞாயிற்றுகிழமை(அக்டோபர் 6) மிகவும் கோலாகலமாக நிறைவடைந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து மூன்று நாட்கள் ஆகியும் இன்னமும் ரசிகர்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மோகம் சிறிது குறையாமல் தான் இருக்கிறது. அந்த அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. என்னதான் பல சர்ச்சைகளையும் ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்தாலும் பிக் பாஸ் நிகிழ்ச்சையை ரசிகர்கள் காணாமல் இருக்கப்போவது இல்லை என்பது தான் உண்மை.

-விளம்பரம்-
Image result for bigg boss season 1 gayathri

அந்த அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மீது ரசிகர்கள் மோகம் கொண்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதன் முதலில் ஆங்கிலத்தில் தான் துவங்கப்பட்டது. அதன் பின்னர் இந்தியாவில் இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இந்தியில் இதுவரை 13 சீசன் களை கடந்திருந்தாலும் தமிழில் 3 சீசன்களை மட்டும் தான் கடந்துள்ளது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி 3 சீசன் களை கடந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த சீசனில் பங்கு பெற்ற ஆரவ் மற்றும் ஜூலியை தவிர அனைத்து பிரபலங்களும் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபராக தான் இருந்து வந்தார்கள்.

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் என்னவென்றே புரியாத ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமுறைகளும் இயல்பும் புரிய கொஞ்சம் நேரம் பிடித்தது இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு சீசனாக தற்போதும் இருந்து வருகிறது. இது மட்டுமல்லாமல் இந்த சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அனைவருமே தங்களது உண்மையான முகத்தை காட்டி இருந்தார்கள். இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் இந்த நிகழ்ச்சியைப் பற்றிய எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் இருந்ததுதான் இதற்கு முக்கிய காரணமாக இருந்து வந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் சிறந்த சீசன் என்று பிரபல நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளருமான காயத்ரி ரகுராம் ட்வீட் செய்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்ட காயத்ரி இந்த சீசனில் கலந்து கொண்ட வணிதாவிற்கு நிகரான ஒரு நபராக இருந்து வந்தார். உள்ளே நுழைந்த முதல் நாளே ஜூலியை வம்பிழுத்து நிகழ்ச்சியை சூடு பிடிக்க வைத்தார். அதன் பின்னர் வீட்டில் உள்ள பல்வேறு போட்டியாளர்களிடம் இவர் கொஞ்சம் கரடு முரடாகவே நடந்துகொண்டார். மேலும், இவருக்கும் ஓவியா விற்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டேதான் இருந்தது இருப்பினும் இறுதியில் ஓவியா உடன் கொஞ்சம் நட்பாக பழகி வந்தார். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் நடந்து கொண்ட விதத்தை ரசிகர்களின் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகினார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் காயத்ரி ரகுராம் சமூகவலைதளத்தில் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தால் அதற்கு முக்கிய காரணமே இவர் தீவிர பாஜகவின் நிர்வாகி என்பதால்தான் பாஜக குறித்து யாராவது தவறாகப் பேசிவிட்டால் உடனே பொங்கி எழுந்து விடுவார். இதுமட்டுமல்லாது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு சீசன்களில் தொடர்ந்து பின்பற்றி வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் நடந்துமுடிந்த சீசன் 3 குறித்தும் பல்வேறு ட்வீட்களை பதிவிட்டு வந்தார் காயத்ரி. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் மிகவும் வெற்றிகரமான சீசன் என்று பதிவிட அதற்கு பதிலளித்த காயத்ரி, உண்மைதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் மிகவும் வெற்றிகரமான சீசன் அதற்கு முக்கிய காரணமே அதில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் அதைப் பற்றிய எந்த ஒரு அனுபவமும் அறிவும் இல்லாததால்தான் முதல் சீசன் மிகவும் இயல்பாக இருந்தது என்று கூறியுள்ளார்.

Advertisement