‘இந்தப் பக்கம்தான்டா எவனுமே அடிக்க மாட்டான்’னு சொன்னாரு – மாஸ்டர் பிரபலம் சுவாரசியம்

0
3628
Vijay

தமிழ் சினிமா உலகில் மக்கள் மத்தியில் பிரபலமான எவ்வளவோ டான்ஸ் மாஸ்டர் உள்ளார்கள். அந்த வகையில் பிரபலமான டான்ஸர் ஒருவர் தான் ஹுமை சந்த். இவர் பல படங்களில் ஹீரோவுக்கு பின்னால் நடனம் ஆடி இருப்பதை பார்த்திருப்போம். இவர் சினிமா உலகில் டான்ஸராகவும், பல படங்களுக்கு உதவி நடன இயக்குனராகவும் இருக்கிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர் சினிமா துறையில் விஜயுடன் நடித்த அனுபவம் குறித்து கேட்டதற்கு அவர் கூறியது, எனக்கு சின்ன வயதிலிருந்தே விஜய் சாரோட டான்ஸ் ரொம்ப பிடிக்கும். அவருடைய டான்ஸுக்கு நான் ஒரு பெரிய ரசிகன். நான் அவருடன் டான்ஸ் ஆட வேண்டும் என்று ரொம்ப நாளாக காத்துக்கொண்டிருந்தேன்.

விஜய்

- Advertisement -

முதன் முதலாக நான் அவருடன் அழகிய தமிழ் மகன் படத்தில் தான் டான்ஸ் ஆடினேன். அந்த படத்தின் போது எனக்கு மலேரியா வந்துவிட்டது. இருந்தாலும் பரவாயில்லை என்று நான் அந்த படத்தில் விஜய் சார் உடன் ஆடினேன். அதற்குப் பிறகு தலைவா, கத்தி என்று தொடர்ந்து பல படங்களில் நான் அவருடன் ஆடி இருக்கிறேன். விஜய் சார் உடன் ஷூட்டிங்கில் இருக்கும் போது அவர் என்ன செய்து கொண்டிருப்பார் என்று நான் கவனித்துக் கொண்டே இருப்பேன். விஜய் சார் ஆன் ஸ்கிரீனை விட ஆப் ஸ்கிரீனில் தான் செம்ம ஸ்டைல் இருப்பார்.

இப்போது நான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தில் நான் அசிஸ்டன்ட் கோரியோகிராபர் ஆக இருக்கிறேன். அவருடைய ஒவ்வொரு ஸ்டைலையும் பார்த்து நான் மெய்மறந்து நின்று விட்டேன். சோபி டான்ஸ் மாஸ்டர் கிட்ட தான் நான் அசிஸ்டன்ட் கோரியோகிராபர் ஆக உள்ளேன். மாஸ்டர் படத்தில் ஒரு பாட்டுக்கு தான் நான் ஆடினேன். அந்த பாட்டு ஷூட்டிங் எடுக்க மூன்று நாள் ஆனது. அதனால் நான் பயங்கரமாக என்ஜாய் பண்ணிட்டு இருந்தேன்.

-விளம்பரம்-
ஹுமை சந்த்

ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிந்தவுடன் சாயங்காலம் எல்லோரும் கிரிக்கெட் விளையாடுவார்கள். அப்ப விஜய் சார் என்கிட்ட பேசின நினைவுகளை என்னால் மறக்கவே முடியாது. அப்படி ஒரு நாள் எல்லோரும் கிரிக்கெட் விளையாடும் போது நானும் விளையாடாம கொஞ்ச தூரம் தள்ளி நின்று கொண்டு இருந்தேன். முதலில் பேட்டிங் விஜய் சார் டீம் தான் பண்ணாங்க. அப்போது அவர் என் பக்கத்தில் வந்து நின்றார்.

‘என்னடா இவ்வளவு வேகமாக பந்து போடுறாங்க, அடுத்து நம்மளையும் பேட்டிங் பண்ணச் சொல்லுவாங்களோ. போகலாமா, வேணாமான்னு என்கிட்ட கேட்டார். உடனே நான் சார் போய் பேட்டிங் பண்ணுங்க என்று சொன்னேன். அவரும் செமயா பேட்டிங் பண்ணார். ரெண்டு சிக்ஸ் அடிச்சார். அடுத்து அவர் டீம் பெளலிங் போடும் போது என் பக்கத்துல வந்து நின்னு கிட்டார்.

அஜித்

அப்ப அவர் ‘இந்தப் பக்கம்தான்டா எவனுமே அடிக்க மாட்டான். நான் இங்கேயே நின்னுக்குறேன்’னு சொன்னார்’. அவர் இப்படி ஃப்ரீயா என்கிட்ட பேசுவாரு என்று நான் ஒருநாளும் கனவில் கூட நினைத்துப் பார்க்க வில்லை. இந்த நினைவுகளை என் வாழ்வில் மறக்கவே முடியாது என்று புன்னகையுடன் கூறினார்.

Advertisement