தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள்.

தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 129 பேர் வெற்றி பெற்றார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். அதன் பின் பல ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டது. இதற்கு தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தின் கொடியை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறார்.

Advertisement

விஜய் மக்கள் இயக்கம் :

இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகிறது.
விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார்கள். விஜய் அவர்கள் திரைத்துறையை தாண்டி அரசியலிலும் தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்ட இருக்கிறார் என்று பலரும் கூறுகிறார்கள். இதற்காக சினிமாவின் மூலம் ஏராளமான ரசிகர்களை விஜய் தன்வசம் படுத்தி வருகிறார்.

அதனின் முக்கிய படியாக தான் கட்சி தொண்டர்களாக மாற்றி இருக்கிறார் என்றும் கட்சி வேலைகளும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் விஜய் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.சமீபத்தில் விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருந்தார். இதன் மூலம் விஜய் அரசியல் வருவதற்கு அடுத்த கட்டமாக தான் இதையெல்லாம் செய்கிறார் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர்.

Advertisement

மாவட்ட தலைவர்கள் கூட்டம் :

மேலும், இன்னும் சில தினங்களில் விஜய் தன்னுடைய கட்சியின் பெயரை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் உடைய அரசியல் வருகைக்கு ஆதரவும் எதிர்ப்பும் பெருகிக்கொண்டிருக்கும் நிலையில் விஜய் துவங்க இருக்கும் வரும் 4ஆம் தேதி விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.

Advertisement

கட்சியின் பெயர் :

இந்த கூட்டத்தில் விஜய் முக்கிய முடிவுகளை அறிவிக்க இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் துவங்க இருக்கும் கட்சியின் பெயர் இன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் இன்று விஜய்யின் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விஜய் துவங்கி இருக்கும் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement