மெர்சல் படத்தில் விஜய்யின் கைதி ட்ரெஸ்ஸில் இதை நோட் செய்துள்ளீர்களா ? – அட்லீ எவ்ளோ பெரிய விஜய் ரசிகர்னு இப்போ புரியுதா.

0
38056
mersal
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர் ஆவார். இவர் சினிமா உலகில் இயக்குனர், திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டவர். அட்லீ அவர்கள் தளபதி விஜயை வைத்து மூன்று முறை படம் இயக்கியுள்ளார். மூன்று படங்களுமே வசூலை அள்ளி தந்தது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான். பின் விஜய்யும், அட்லீ நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டார்கள் என்றே சொல்லலாம். அட்லீ தளபதி வெறியன் ஆவார். அட்லீ அவர்கள் விஜயை வைத்து தெறி என்ற படத்தை இயக்கினார்.

-விளம்பரம்-

அந்த படத்தை தொடர்ந்து அட்லீ மெர்சல் என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில் மெர்சல் படம் குறித்தும்,அட்லீ குறித்தும் ஒரு சுவாரசியமான தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அட்லி இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் மெர்சல். இந்த படத்தில் விஜய், எஸ் ஜே சூர்யா, சமந்தா, வடிவேலு, காஜல் அகர்வால், நித்யா மேனன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் பாக்ஸ் ஆபிசில் 200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்தது.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் தளபதி விஜய் அவர்கள் மூன்று வேடத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியில் விஜய் அவர்கள் அணிந்திருக்கும் கைதி உடையில் விஜய்யின் பிறந்த தேதி (ஜூன் 22) என்பதை குறிப்பிடும் வகையில் 226 என்ற நம்பராக வைத்திருப்பார். தற்போது அந்த படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அட்லி அவர்கள் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் இந்த புகைப்படம். மீண்டும் இவர்கள் இருவர் கூட்டணியில் வரும் படத்துக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் உலகம் முழுவதும் பட்டைய கிளப்பியது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement