10 ஆண்டுகளாக பேட்டி கொடுக்காததுக்கு இதான் காரணம் – விஜய்யை பாதித்த அந்த ஒரு விஷயம் இதுதானாம். அவரே சொன்ன தகவல்.

0
619
Vijay
- Advertisement -

10 ஆண்டுகளாக பேட்டி கொடுக்காதது ஏன் என்ற கேள்விக்கு விஜய் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-
Vijay

இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார்.இந்த படம் வருகிற 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் துவங்கி ட்ரைலர் வரை விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. பொதுவாக விஜய் படங்கள் என்றாலே ரிலீசுக்கு முன்னர் இசை வெளியிட்டு விழா ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்க்கப்படும்.

இதையும் பாருங்க : பிரம்மாண்டமாக உருவாகி வரும் அஜித்தின் புது வீடு- வைரலாகும் புகைப்படம் இதோ.

- Advertisement -

Beastக்கு No ஆடியோ லான்ச் :

அதுவும் இசை வெளியிட்டு விழாவில் விஜய்யின் பேச்சை கேட்கவே அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துகொண்டு இருப்பார்கள். இறுதியாக மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய் பேசியது மட்டுமல்லாமல் மேடையில் நடனமாடி இருந்தார். இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் இசை வெளியிட்டு விழாவை ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்க, பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லை என்று அறிவிப்பு வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் பெரும் அப்செட் அடைந்தனர்.

10 வருடம் பேட்டி கொடுக்காத காரணம் :

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல் கேள்வியாக நெல்சன், விஜய்யிடம் ஏன் 10 ஆண்டுகளாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை என்று கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த விஜய் ‘நேரம் இல்லாததால் பேட்டி கொடுக்காமல் இல்ல. 10 ஆண்டுக்கு முன் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தேன். அதில் அவர்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லி இருந்தேன். ஆனால், நான் ஏதோ வேறு விதமாக பேசியது போல எழுதிவிட்டார்கள்.

-விளம்பரம்-

வேறு விதமாக எழுதிவிட்டார்கள் :

எப்போதும் பேசும் போது வேறு மாதிரி இருக்கும், அதை எழுதும் போது வேறு மாதிரி தானே இருக்கும். ஆனால், அந்த விஷயத்தை நான் படித்ததும் எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. பலரும் என்னிடம் ‘என்ன இவ்ளோ கோவமா பேசி இருக்கிறீர்கள்’ என்றெல்லாம் கேட்டனர். எல்லாரிடமும் நாம் போய் விளக்கம் கொடுக்க முடியாது இல்ல. அதனால் சரி, இனிமே பேட்டியே கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.

This image has an empty alt attribute; its file name is 1-66.jpg

இசை வெளியீட்டு விழா :

இருந்தாலும் நான் பேச நினைப்பதை எல்லாம் இசை வெளியீட்டு விழாவில் நான் பேசிவிடுவேன். அதிலும் ‘என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே’ என்று நான் சொல்லும் போது எனது ரசிகர்களை நினைத்து நான் மகிழ்ச்சியாடைவேன். ஆனால், இப்போது 10 வருடம் கழித்து உனக்கு பேட்டி கொடுக்கிறேன் என்று கூறி இருக்கிறார் விஜய். மேலும், இந்த பேட்டியில் இன்னும் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார் விஜய்.

Advertisement