விஜய் தொடர்ந்த வழக்கு – மேல் முறையீட்டில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு என்ன தெரியுமா ?

0
182
Vijay
- Advertisement -

தன்னுடைய சொகுசு கார் குறித்த வழக்கு மேல்முறையீடு செய்த விஜய்க்கு தற்போது வெற்றி கிடைத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தனி நீதிபதியின் சர்ச்சைக்குரிய கருத்து நீக்கம் செய்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது. அந்த வகையில் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருந்தது. தற்போது விஜய் அவர்கள் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். மேலும், பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, பொதுவாகவே சினிமாவில் இருக்கும் பல்வேறு நடிகர், நடிகைகள் சொகுசு கார்களை தான் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான பிரபலங்கள் Audi, Bmw என்று சொகுசு கார்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், தமிழ் சினிமாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார் இரண்டே நபர்களிடம் தான் இருக்கிறது.

- Advertisement -

விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார்:

அதில் விஜய்யும் ஒருவர். அஜித் பைக் பிரியர் என்றால் விஜய் ஒரு கார் பிரியர். இவரிடத்தில் ஏகப்பட்ட கார் கலெக்ஷன் இருக்கிறது. அந்த வகையில் விஜயிடம் இருக்கும் விலை அதிகமான காரில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கார். நடிகர் விஜய் அவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற காரை இறக்குமதி செய்திருக்கிறார். அந்த காருக்கு நுழைவு வரி ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது தனி நீதிபதி சுப்பிரமணிய அவர்கள், சினிமா நடிகர்கள் உரிய வரியை செலுத்த வேண்டும்.

விஜய்யை நீதிபதி விமர்சித்தது:

வரி வருமானம் என்பது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய ஒன்று. மேலும், திரையில் மட்டும் சமூக நீதிக்காக பாடுவது போல நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், வரிவிலக்கு கூறுவதை ஏற்க முடியாது. ரீல் நடிகர்களாக இல்லாமல் ரியலாக இருக்க வேண்டும் என்று நீதிபதி சர்ச்சைக்குரிய கருத்து பேசி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் இருந்தார். இதனால் மனவேதனை அடைந்த விஜய் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். அதுமட்டுமில்லாமல் நீதிபதி கூறிய கருத்தை நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

விஜய்யின் சொகுசு கார் பிரச்சனை:

இப்படி இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது விஜய்க்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கு விசாரணையில் விஜய் செலுத்தவேண்டிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரியை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. விஜய்யும் அந்த காருக்கான முழு வரியை செலுத்தி இருந்தார். பின் தனி நீதிபதியின் விமர்சனத்தை நீக்கக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக நீதிபதிகள் கூறியிருப்பது, விஜய் தரப்பிலிருந்து காருக்கு தேவையான வரி முழுவதையும் செலுத்தி ஆகிவிட்டது. வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்ல வேண்டிய அவசியமில்லை.

வழக்கு தொடர்பாக சென்னை நீதிபதிகள் கூறியிருப்பது:

நுழைவு வரி செலுத்துவதில்லை என்றும் வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்து இருக்க கூறுவதும் தேவையற்ற கருத்துக்கள். இறக்குமதிக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி விஜய் குறித்து கூறிய கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் அவருடைய மனதை புண்படுத்தி உள்ளது. அது மட்டுமில்லாமல் விஜய்யை குற்றவாளி போல காட்டி உள்ளது என விஜய் தரப்பில் வாதம் செய்து இருந்தார்கள். இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு நீதிபதி தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இதை ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement