வெளியானது மாஸ்டர் பட ‘குட்டி ஸ்டோரி’ பாடலின் 4k வீடியோ – குவியும் லைக்ஸ்.

0
2697
Vijay
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

கடந்த வார இறுதி நாட்களில் ‘மாஸ்டர்’ திரைப்படம் உலக அளவில் 23 மில்லியன் டாலர் வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது. இதனால் மற்ற ஹாலிவுட் படங்களைக் காட்டிலும் இப்படம் இரண்டு மடங்கு அதிகம் வசூலைப் பெற்றுள்ளது தெரிய வந்திருக்கிறது. பல நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டாலும், உலக அளவில் மாஸ்டர் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது.

- Advertisement -

அதே போல இந்த படத்தை இந்தியில் எடுக்க உள்ளதாகவும் அதில் விஜய் கதாபத்திரத்தில் ரித்திக் ரோஷன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் குட்டி ஸ்டோரி பாடலில் வீடியோ யூடுயூபில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். மேலும், இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் படம் வெளியாவதற்கு முன்பே ஹிட் அடைந்தது.

அதிலும் இந்த படத்தில் விஜய் பாடிய ‘குட்டி ஸ்டோரி’ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இந்தப் பாடல் வெளியான 24 மணி நேரத்தில் உலகளவில் அதிகம் பேர் பார்த்த வீடியோக்கள் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்து இருந்தது. மேலும், இந்த பாடல் சிறுவர் சீர் திருத்த பள்ளியில் விஜய் பாடியது தான் ஹைலைட்டே. இதோ அந்த வீடியோ.

-விளம்பரம்-
Advertisement