சிவா கார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் டிசம்பர் மாத இறுதியில் வெளிவந்த படம் வேலைக்காரன். அழுத்தமான சமூக கருத்துடான் வந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், திரையுலகில் பலரும் படக்குழுவை பாராட்டினார். படம் வணிக ரீதியாக நஷ்டம் என கூறப்பட்டாலும். அனைத்து தரப்பிலான மக்களுக்கும் திருப்திகரமான படமாக அமைந்தது.
இந்நிலையில் இயக்குனர் மோகன்ராஜாவை அழைத்து வேலைக்காரன் படக்குழுவினை பாராட்டியுள்ளார் விஜய். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் மோகன்ராஜா.
என பதிவு செய்துள்ளார் மோகன் ராஜா.
Met my 'Dear friend' aft long time.. Watta man he is ?.. Had wonderful chat abt Ev thing we missed all these days.. The way he was proud abt Velaikkaran is one of the best moments to me .. pic.twitter.com/a9EkpnnPV7
— Mohan Raja (@jayam_mohanraja) January 17, 2018
என்னுடைய நண்பரை நீண்ட காலம் கழித்து சந்தித்தேன். என்ன ஒரு மனிதர் அவர்…! அந்த கால நினைவுகளை தற்போது மிஸ் செய்கிறோம். வேலைக்காரன் படம் குறித்து அவரை பாராட்டி பெருமை கொண்டார்