தர்பாரால் சம்பளத்தை குறைத்த ரஜினி, மாஸ்டரால் சம்பளத்தை ஏற்றிய விஜய்.

0
863
vijay65

சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கடந்து. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.

ரஜினி - விஜய்

ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் வெளியானதை அடுத்து இந்த படத்தின் முதல் ஷெட்டுயூல் வெளிநாட்டில் நடைபெற இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் விஜய்யின் மார்க்கட் எகிறியுள்ளது.

- Advertisement -

இதனால் விஜய்யின் சம்பளமும் ராக்கட் வேகத்தில் உயர்ந்துள்ளது. நடிகர் விஜய் இறுதியாக நடித்த பிகில், மாஸ்டர் இரண்டு படமும் வசூல் ரிதியாக நல்ல வெற்றியை பெற்றது. பிகில் படத்திற்காக 50 கோடி சம்பளம் பெற்ற விஜய், மாஸ்டர் படத்தில் அப்படியே 30 கோடி சம்பளத்தை ஏற்றி 80 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். இப்படி ஒரு நிலையில் விஜய் 65 படத்திற்கு நடிகர் விஜய் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற இருக்கிறாராம்.

Thalapathy 65 Director Revealed? | Thalapathy Vijay | TK - YouTube

இது ஒருபுறம் இருக்க தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினி, தன்னுடைய இறுதிப் படமான தர்பார் படத்திற்கு 100 ரூபாய் சம்பளம் வாங்கினார். ஆனால், தர்பார் படத்தின் தோல்வியை தொடர்ந்து  இந்த சம்பளம் ‘அண்ணாத்த’ படத்தில் குறைந்துவிட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘தர்பார்’ படத்துக்கு வாங்கிய சம்பளத்தைவிடக் குறைவாகவே வாங்கியிருக்கிறார் ரஜினி.

-விளம்பரம்-
Advertisement