சர்கார் படத்தில் விஜய்,வரலக்ஷ்மி வேடம் இதுவா.? யாரோட பொண்ணு தெரியுமா.?வெளிவந்த ரகசியம்.!

0
1279
sarkar
- Advertisement -

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து படத்தை பற்றிய பல்வேறு தகவல்கலும் வெளியாகி கொண்டுதான் இருக்கிறது.

-விளம்பரம்-

sarkar

- Advertisement -

இந்த படத்தில் விஜயுடன் பைரவா படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் இந்த படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் மேலும் ஒரு நாயகி இணைய போவதாக தகவல்கள் ஏற்கனவே வந்திருந்த நிலையில் அது சரத் குமாரின் மகள் வரலட்சுமி என்று சில மாதங்களுக்கு முன்னர் உறுதியானது. அதுபோக இந்த படம் அரசியல் சம்மந்தபட்ட கதையாக இருக்கும் என்பதும் ஏற்கனவே அறிந்த ஒரு விடயம் தான்.

இந்நிலையில்’சர்கார் ‘ படத்தில் நடிக்கும் வரலட்சுமிக்கும் அரசியல் சம்மந்தபட்ட கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ‘கொடி’ படத்தில் நடித்த திரிஷா போன்று ஒரு வில்லத்தனம் கலந்த ஒரு நடிகையாக நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

varalakshmi

இதன் கூடுதல் தகவலாக நடிகை வரலட்சமி ஒரு முதலமைச்சரின் மகளாக நடித்துள்ளாராம். அதுமட்டுமல்லாமல் அவர் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் ஒரு பெண்ணாக நடித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தாரை தப்பட்டை படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய வரலட்சுமிக்கு இந்த கதாபாத்திரமும் ஒரு நல்ல பெயரை ஏற்படுத்தி தரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement