முடிந்தால் இப்போ நீக்குங்க பார்போம்..! விஜய் தீவிர ரசிகன் விட்ட சவால்.! புகைப்படம் உள்ளே

0
1155
vijay-sarkar

தமிழ் சினிமாவில் இளையதளபதி என்று அழைக்கப்படும் விஜய் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு மாபெரும் நடிகராக இருந்து வருகிறார். அதற்கு ஏற்றார் போல அவருக்கு சில வெறித்தனமான சில ரசிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

sarkar

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “சர்கார் ” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியானது. அந்த போஸ்டரில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போல இருந்ததால் பல்வேறு தரப்பினரும் நடிகர் விஜய்க்கு எதிராக கொடி பிடிக்க துவங்கினர்.

மேலும், புகை பிடித்தபடி உள்ள விஜய்யின் படத்தை இணையதளங்களில் இருந்தும், சமூக வலைதளங்களில் இருந்தும் நீக்க வேண்டும் என்று நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு பொதுசுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து ‘சர்கார்’ படத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்த பர்ஸ்ட் லுக் புகைப்படம் மாற்றப்பட்டது.

vijay sarkar

விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்த இந்த செயல் குறித்து பல்வேறு ரசிகர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் நீக்கப்பட்ட “சர்கார் ” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்த விஜய்யின் புகைப்படத்தை தனது கையில் பச்சை குத்தியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.