இறக்குமதி கார் வழக்கு விஷயத்தில் என்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியது மட்டுமில்லாமல் குற்றவாளி போல் நடத்தியது வேதனையாக உள்ளது என்று நடிகர் விஜய் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக விஜய் திகழ்ந்து வருகிறார். தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றன. இதனிடையே நடிகர் விஜய் அவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்து இருந்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகி இருந்தார்.
அப்போது அங்கு வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்கள். இதனை தொடர்ந்து காருக்கு இறக்குமதி வரியை செலுத்திய விஜய் நுழைவு வரிக்கு தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பிலிருந்து வழக்கு தொடரப்பட்டது. பின் அந்த வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. உடனே விஜய் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். பின் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் அவர்கள் நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரியை செலுத்த வேண்டும், அவர்கள் நடைமுறை வாழ்க்கையிலும் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது என்று கூறி விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிட்டிருந்தார். பின் விஜய் அவர்கள் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்தும், தனி நீதிபதி தன்னை விமர்சித்ததை குறித்தும் நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நடிகர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி இருந்தார். இந்நிலையில் அவர் கூறியது, நிலுவைத் தொகை 32 லட்சம் 30 ஆயிரத்தை ஆகஸ்ட் 7ஆம் தேதியை செலுத்தினார். அது அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நடிகர் விஜய்க்கு எதிராக கருத்துகளை வழங்கிய தீர்ப்பில் இருந்து நீக்க வேண்டும். நுழைவு வரி வசூலிப்பதா? வேண்டாமா? என்பது 20 ஆண்டு காலமாகவே நடந்து வரும் பிரச்சனை. சுங்கவரி விவகாரத்தில் மாநில அரசு சட்டம் இயற்ற முடியாது என்பதால் மத்திய அரசு தான் சட்டம் இயற்ற முடியும். இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை இருந்ததாலும் 20% முதலில் செலுத்தப்பட்டிருந்தது. தற்போது 80 சதவீதம் வரையும் விஜய் செலுத்தியுள்ளார். பின் விஜய் வழக்கு ஆவணங்களில் தொழிலை குறிப்பிடவில்லை என்று கூறி இருந்தார்கள்.
ஆனால், அவர் அதை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நுழைவு வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்தால் உண்மையான கதாநாயகன் எப்படி இருக்கனும்,என்ன பண்ணனும் என்றும் வரி செலுத்த மறுப்பது சட்டவிரோதம் போன்று என்று விஜயை, நீதிபதி தேவையற்ற கருத்துக்களால் பேசி உள்ளார். விஜய் தன்னுடைய கடின உழைப்பால் வாங்கப்பட்ட அந்த காரை குறித்து நீதிபதி விமர்சிப்பது தேவையற்ற ஒன்று. சினிமாத்துறை என்பது லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வாழ்க்கையும் தருகிறது. வரி கட்டாமல் மறைப்பது அவர்களுடைய எண்ணம் கிடையாது. மேலும், விஜய் மற்றவர்களைப் போல தான் இந்த வழக்கை தொடர்ந்தார். ஆனால், அவரை மிக மோசமாக விமர்சித்து உள்ளார்கள். சில வழக்குகளில் நீதிமன்றங்களில் தவறான வழி நடத்துபவரை ஆய்வு செய்யலாம் என்றும் அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கலாம் என்றும் வரி கேட்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம். இந்த வழக்கு விஜய்க்கு மட்டுமில்லாமல் நடிகர் தனுஷ், சூர்யா என்று பல நடிகர்கள் உள்ளார்கள்.
நடிகர்கள் என்று அடைமொழி இருப்பதால் அவர்களுக்கு கருத்து தெரிவிக்கக் கூடாது, அவர்கள் என்றாலே இப்படித்தான் என்று குற்றவாளி போல நடத்த வேண்டாம். இது வேதனை அளிக்கிறது. ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், நடிகர் விஜய் மீது வைத்துள்ள எதிர்மறை கருத்துக்களை நீக்க வேண்டுமென்று விஜய் தரப்பு வக்கீல் கூறி உள்ளார். இதனை அடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர். விஜய்யின் மீதான தவறான விமர்சனத்திற்கு நல்ல தீர்ப்பு வரும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.