மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் எடுத்த selfie – ட்விட்டரில் செய்த சாதனை. இதெல்லாம் தளபதிக்கு மட்டும் தான் சாத்தியம்.

0
795
vijayselfie
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முடி சூடா மன்னனாக பட்டைய கிளப்பி கொண்டு வருபவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் தெறிக்க விட்டது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் படம் “மாஸ்டர்”. மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அதே போல இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் நெய்வேலியில் நடைபெற்ற போது விஜய்க்கு வருமான வரித்துறை சோதனை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

மேலும், சில அரசியல் கட்சியினர் அங்கே போராட்டம் நடத்தியதால் விஜய்யின் படப்பிடிப்புகள் கூட நிறுத்தப்பட்டது. ஆனால், படப்பிடிப்பில் ரசிகர்களின் கூட்டமும் அலைமோதியது. பின்னர் மீண்டும் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பில் ரசிகர்களை சந்திக்க விஜய் வேன் மீது ஏறி கூலிங் கிளாஸை போட்டு கொண்டு ஒரு நிமிஷம் என்று சைகை காட்டி விட்டு செல்ஃபீ எடுத்துக் கொண்டார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி படு வைரலானது .

தளபதி விஜய் அவர்கள் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டுட்ரெண்டிங் செய்த்தனர் . இதை ரசிகர்கள் #ThalapathyVijaySelfie என்ற ஹேர்டேக் செய்து கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் விஜய் எடுத்த செல்பி ஒன்று கூட செம்ம வைரல் ஆனது, அந்த செல்பி தற்போது வரை 1 லட்சம் RT ஆகியுள்ளது. இந்தியாவில் வேறு எந்த நடிகர்களுக்கும் சினிமா தாண்டிய ஒரு பெர்சனல் புகைப்படம் இவ்வளவு RT ஆகியிருக்க வாய்ப்பில்லை.

-விளம்பரம்-
Advertisement