மக்கள் செல்வனாக தமிழ் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜய் சேதுபதி. இவர் தன்னுடைய கடின உழைப்பால் தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தை பற்றி பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, நான் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடித்து இருந்தேன். அந்த படத்தில் நான் ஓரமாக நின்றுக் கொண்டிருந்தேன். அதனால் அந்த படத்தில் அதிகமாக என்னை தெரிந்திருக்க முடியாது.
இதையும் பாருங்க : இந்த மூனு படங்களில் இருக்கும் ஒற்றுமை என்ன சொல்லுங்க – டேக் செய்த ரசிகர். லோகேஷ் கனகராஜின் குசும்பான பதில்.
பல படங்களில் இந்த மாதிரி கிடைத்த சின்னச் சின்ன ரோல்களில் நடித்து இருக்கிறேன். ஆனால், பலருக்கும் தெரியாது என்று கூறியிருந்தார். 2004 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற படம் தான் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி. இந்த படத்தில் ஜெயம் ரவி, நதியா,அசின்,பிரகாஷ்ராஜ் போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். ஜெயம் ரவியின் வாழ்க்கைக்கு இந்த படம் மிக திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம்.
மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளிவந்த படம் லாபம். இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன், ஜகபதி பாபு, தன்ஷிகா, கலையரசன், ரமேஷ் திலக் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படம் முழுக்க முழுக்க விவசாயத்தை மையமாக கொண்ட கதை. இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சன் டிவியில் ஒளிபரப்பி இருந்தார்கள்.