13 வயசுல கமல் சார் படத்துல ரிஜெக்ட் ஆனேன் – ஆடியோ லாஞ்சில் பேசிய விஜய் சேதுபதி. எந்த படம் தெரியுமா ?

0
769
vjs
- Advertisement -

விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் கமல் குறித்து விஜய் சேதுபதி கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடா முயற்சியினாலும், கடும் உழைப்பினாலும் தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் தற்போது முன்னணி நடிகராக மிரட்டி கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து இருந்தார். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி பல படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார்.

- Advertisement -

விக்ரம் படம்:

அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள படம் விக்ரம். மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசன், பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

வில்லனாக மிரட்டும் விஜய் சேதுபதி:

அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், விக்ரம் படத்தில் கேங்ஸ்டராக விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார். சமீப காலமாகவே இவர் ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் படங்களில் மிரட்டி இருக்கிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த மாஸ்டர் படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அதேபோல தெலுங்கு உப்பன்னா படத்திலும் இவர் வில்லனாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

விக்ரம் படத்தின் முதல் பாடல்:

இதை தொடர்ந்து தற்போது இவர் விக்ரம் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் பத்தல பத்தல வெளியாகி இருந்தது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. மேலும், மே 15ஆம் தேதி விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. இதில் விக்ரம் படத்தின் படக்குழுவினரை தவிர இயக்குனர் பா ரஞ்சித், சிம்பு, உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், காளிதாஸ் ஜெயராம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கமல் குறித்து விஜய் சேதுபதி சொன்னது:

இந்நிலையில் விழாவில் விஜய் சேதுபதி கூறியிருப்பது, கமல் 60 பங்க்ஷன் நடந்த போது கமல் சார் முன்னாடி அவர் கூட நடிக்கணும் என்று கேட்டேன். இப்போ அது நடந்திருக்கு. அடுத்து ஒரு வேண்டுகோள் சார், உங்கள் இயக்கத்தில் நடிக்கணும்னு ஆசை. 13 வயதில் கமல் சாருடன் நம்மவர் படத்தில் நடிக்க ஆடிசன் இடத்திற்குப் போய் ரிஜெக்ட் ஆனேன். ஆனால், இப்போ சேர்ந்து நடித்தது நான் செய்த புண்ணியமா? என் பாட்டன் செய்த புண்ணியமா? என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார். இப்படி இவர் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement