அன்று விஜய் – இன்று விஜய் சேதுபதியா. பி ஜே பி புகாருக்கு ஆளான விஜய் சேதுபதி.

0
1026
VijayVijaysethupathi
- Advertisement -

சினிமாவில் வெற்றி அடைய திறமை ஒரு பக்கம் இருந்தாலும் அதையும் தாண்டி லக்கு என்ற ஒரு விஷயம் ரொம்ப முக்கியம். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு அந்த லக் சரியான முறையில் அமைந்தது. விஜய் சேதுபதி அவர்கள் ஆரம்பத்தில் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக அசத்திய இவர் தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Vijaysethupathi

நடிப்பையும் தாண்டி விஜய் சேதுபதியின் பேச்சுக்கும் பல ரசிகர்கள் உள்ளனர். ஆனால், சில சமயங்களில் சில பேச்சுக்கள் சர்ச்சையாக மாறி விடுகிறது. அந்த வகையில் அந்இவர் சன் டிவியில் நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது இந்து கடவுள் குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.

- Advertisement -

அந்த வீடியோவில், சாமி அபிஷேகம் செய்வதை காட்டுவார்கள். பின்னர் துணி போட்டு மூடி விடுவார்கள். அப்போது ஒரு குழந்தை ஏன் துணி போட்டு மறைத்து விடுகிறார்கள் என்று தாத்தாவிடம் கேட்டதற்கு.அதற்கு அந்த தாத்தா குளித்து முடித்து உடை மாற்ற போகிறார்கள் என்று கூறினார். உடனே அந்த குழந்தை ஏன் தாத்தா குளிக்கும் போது காட்டி விட்டு உடை மாற்றுவதை ஏன் மூடி விட்டார்கள் என்று கூறியதாக விஜய் சேதுபதி அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

விஜய் சேதுபதி எப்போதோ பேசிய இந்த வீடியோ தற்போது வைரலாக பரவ, விஜய் சேதுபதி இந்து கடவுளை அவமதித்துவிட்டார் என்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி பேசி உள்ளார் என்றும் இந்து மக்கள் முன்னணி புகார் அளிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் விஜய் சேதுபதி மீது ஈரோடு மாவட்டம் கோபி போலீஸ் நிலையத்தில் பா ஜ க நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

-விளம்பரம்-

நடிகர் விஜய் சேதுபதி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அது மத ரீதியாகவும் தேசிய இறையாண்மைக்கு எதிராகவும், மத கலவரத்தை தூண்டும் வகையிலும் இருந்தது. விஜய் சேதுபதியின் இந்த பேச்சால் மனவேதனை அடைந்துள்ளோம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். பொதுவாக விஜய் படங்கள் என்றால் பா ஜ க கட்சியினர் பல்வேறு பிரச்சனைகளை செய்துள்ளனர். சமீபத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்ற போது பா ஜ க கட்சியினர் அங்கே குவிந்து போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement