மகனை தொடர்ந்து மகளையும் சினிமாவில் களமிறங்கியுள்ள விஜய் சேதுபதி அதுவும் யார் படத்தில் பாருங்க

0
1237
vij
- Advertisement -

தமிழ் பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருந்து வருகிறார்கள் விஜய் சூர்யா துவங்கி விக்ரம் மகன் துருவ் வரை தமிழ் சினிமாவில் எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருந்து வருகிறார்கள். மேலும், சமீப காலமாகவே தற்போது தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர்களின் வாரிசுகளும் சினிமாவில் கால் தடம் பதித்து வருகிறார்கள். சமீபத்தில்கூட அருண் விஜய்யின் மகன் சூர்யா தயாரிக்கும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்ற அந்தஸ்துடன் இருந்து வரும் விஜய் சேதுபதியின் மக்களும் தற்போது சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சினிமா உலகில் நுழைந்த குறுகிய நாளிலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தன்னுடைய சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். தற்போது இவர் மக்களின் மக்கள் செல்வனாகவே திகழ்ந்து வருகிறார்.

- Advertisement -

விஜய் சேதுபதி திகேரளாவை சேர்ந்த ஜெஸ்ஸி என்பவருக்கும் கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.இவர்களுக்கு சூரியா சேதுபதி என்ற மகனும், ஸ்ரீஜா சேதுபதி என்ற மகளும் உள்ளனர். இவரது மகன் சூரியா, நானும் ரவுடிதான் படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடித்திருப்பார்.அதே போல சிந்துபாத் படத்திலும் நடித்து இருந்தார். அதன் பின்னர் ஜூங்கா படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் சேதுபதி.

இப்படி ஒரு நிலையில் விஜய் சேதுபதியின் மகளும் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். அதுவும் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலேயே ஸ்ரீஜா அறிமுகமாக இருக்கிறார்.  விஜய் சேதுபதி, ரெஜினா கசண்ட்ரா நடிப்பில் உருவாகி உள்ள முகிழ் என்ற படம் மூலம் ஸ்ரீஜா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளார். கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லரை நாளை புத்தாண்டன்று மாலை 5 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிட உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement