தமிழகர்களுக்கு எதிரான கதாபாத்திரம். உதறித்தள்ளிய விஜய் சேதுபதி. குவியும் பாராட்டு.

0
1551
Vijaysethupathi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் தனெக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்தவர் விஜய் சேதுபதி. இவர் ஆரம்பத்தில் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தான் முதன் முதலாக ஹீரோவாக ஆனார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து உள்ளார். இவருடைய நடிப்பும், எதார்த்தமான பேச்சும் தான் மக்கள் மனதில் இடம்பிடிக்க வைத்தது. நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Allu Arjun reveals first look for Sukumar's action film Pushpa on ...

இவருக்கு பிற மொழி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தெலுங்கு மொழி படத்தில் இருந்து விலகி கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் புஷ்பா. இந்த படத்தில் வனத்துறை அதிகாரியாக ஒரு முக்கியமான வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தில் ஹீரோவாக அல்லு அர்ஜுன் நடிக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகி கொண்டதாகவும் அவருக்கு பதிலாக நடிகர் பாபி சிம்ஹா அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் நடந்த செம்மரக் கடத்தல் விஷயமாக கிட்டத்தட்ட 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தை மையப்படுத்தி தான் புஷ்பா என்ற படம் உருவாகி வருகிறது.

Vijay Sethupathi New Release Movie 2019 | Vijay Sethupathi Latest ...

இதில் தமிழர்களை செம்மர கடத்தல்காரர்களாக சித்தரிப்பதை நடிகர் விஜய் சேதுபதிக்கு பிடிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் அவருடைய வனத்துறை அதிகாரி வேடமும் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் வில்லத்தனமான கதாபாத்திரம் என்பதனாலும் தமிழர்களுக்கு எதிரானவராக முத்திரை குத்திக் கொள்ள வேண்டாம் என்ற காரணத்தினால் தான் இவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement