வாடகை வீடு, வட்டி – இத்தனை OTT முதல் டிவி வரை பல கோடி ஈட்டும் விஐய் சேதுபதியின் கஷ்டத்தை பாருங்க.

0
9035
vijaysethu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஜய்சேதுபதி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் நடைபெற்ற விழாவில் விஜய் சேதுபதி அவர்கள் கலந்து கொண்டு இருந்தார். அதில் அவர் சினிமா துறையில் நுழைந்த காரணத்தையும், தன் வாழ்க்கையில் பட்ட பல கஷ்டங்களையும் குறித்து கூறியது, நான் சினிமா துறையில் நுழைந்ததற்கு முதல் காரணமே வீட்டு வாடகை, என் அப்பா வாங்கிய கடன் தான். எனக்கு சினிமா படம் பார்க்கும் பழக்கம் எல்லாம் இல்லை. எப்படியாவது துபாய்க்குச் சென்று கடனை அடைத்து விடலாம் என்ற எண்ணம் தான் இருந்தது. பின் அங்கு சென்று சம்பாதித்த பணம் எல்லாம் வட்டிக்கே தான் சென்றது அசலை கட்ட முடியவில்லை.

-விளம்பரம்-
vijay-sethupathi-speech-at-fefsi-function

அதற்கு பிறகு வீட்டு வாடகை தொல்லை. 20ஆம் தேதி வந்தாலே போதும் எனக்குள் பதட்டம் வந்து விடும். அடுத்த மாதம் எப்படி வாடகை கட்ட போகிறோம் என்ற எண்ணமும், பயமும் வந்து விடும். அதோடு எதையுமே சொல்லாமல் வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகையை உயர்த்துவது கொடுமையாக இருக்கும். விலைவாசி உயர்வதைவிட வீட்டு வாடகை உயர்வு தான் அதிகமாக இருந்தது. வாடகை வீட்டில் இருக்கும் போது சில நேரங்களில் ஏதோ பாகிஸ்தானில் இருக்கிற உணர்வு வரும்.

- Advertisement -

அதிலும் வீட்டு உரிமையாளர்கள் துணி காய போட கூடாது, சுவரில் ஆணி அடிக்க கூடாது, உறவினர்கள் வரக்கூடாது வந்தால் அவர்கள் குளிக்க கூடாது என்ற பல நிபந்தனைகள் போடுவார்கள். இதனாலே ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அப்பாவின் 10 லட்ச ரூபாய் கடனை அடைத்துவிட வேண்டும் சொந்த வீடு என்ற இரண்டு காரணத்திற்காக தான் சினிமாவில் நடிக்க முடிவு செய்தேன். சினிமாவுக்குள் நுழைந்தால் பணம் சம்பாதிக்கலாம். சினிமாவில் நடிக்க எந்த திட்டமும் இல்லை எனக்கு ஆசையும் இருந்ததில்லை.

வீட்டுவாடகை ஒரு பெரிய பாரமாக இருந்தது அப்பாவின் கடன் இதெல்லாம் தான் காரணம். இதேபோல் தான் தொழிலாளர்களுக்கும் கனவு இருக்கும். அந்த கனவு நிறைவேற நான் மனதார வேண்டுகிறேன். பெப்சியின் தலைவர் ஆர் கே செல்வமணி திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது? அவர்களின் அடிப்படைத் தேவை என்ன? அவர்கள் சம்பாதிக்கும் பணம் 50 சதவீதம் வாடகைக்கே செலவாகிறது என பல விஷயங்களை தொழிலாளர்கள் நிலையிலிருந்து யோசித்து இருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது.

-விளம்பரம்-

இதற்காக அவரை நான் மனதார வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன். இது தொடர்பாக நான் செய்தது ஏதோ ஒரு பெரிய உதவி என்று நினைத்தேன். ஆனால், இந்த திட்டம் 800 கோடி மதிப்பு. அதில் நான் கொடுப்பதெல்லாம் ஒரு சிறிய புள்ளி தான். மேலும், நான் இந்த ஒரு கோடி ரூபாயை உடன் நிறுத்திக் கொள்ளும் எண்ணம் இல்லை தொடர்ந்து இந்த திட்டத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பேன். இது ஒரு மிகப்பெரிய கனவு முயற்சி. இது மிகச் சிறப்பாக தொடங்கி நல்ல முறையில் நிறைவடைய வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று உணர்வுபூர்வமாக விஜய்சேதுபதி பேசியிருந்தார்.

Advertisement