இனி அப்படி நடிக்க மாட்டேன் – நடிப்பு விஷயத்தில் விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு.

0
514
- Advertisement -

இனி அப்படியான கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று விஜய் சேதுபதி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

மேலும், சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பால் அபார வளர்ச்சி அடைந்தவர் விஜய்சேதுபதி. அதோடு விஜய் சேதுபதி அவர்கள் அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு நிலையில் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியில் தான் முடிவடைந்தது. ஆனால், இவர் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படங்கள் மட்டும் ஹிட் அடித்து விடுக்கிறது. அந்த வகையில் விஜய் நடிப்பில் வந்த மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டி இருந்தார்.

- Advertisement -

வில்லனாக விஜய் சேதுபதி நடித்த படம்:

அதற்கு முன் இவர் ஒரு தெலுங்கு படத்தில் கூட வில்லனாக நடித்து இருந்தார். பின் கடந்த ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடித்த “விக்ரம்” படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. இதனை அடுத்து இவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஜவான் படம் :

இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த படம் ஜவான். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள்பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி பேட்டி:

இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டி பெற்றிருந்தது. இதனை அடுத்து இவர் தமிழ், ஹிந்தி என பல மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருந்தார். அதில் அவர், வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றது. நிறைய அழுத்தங்கள் ஏற்படுகிறது. வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள்.

வில்லன் ரோல் குறித்து சொன்னது:

ஹீரோவின் இமேஜை குறைக்காமல் நடிக்க சொல்வார்கள். வில்லனாக நான் நடித்த சில காட்சிகள் எடிட்டிங் செய்து நீக்கப்பட்டும் இருக்கிறது . அதனால் நான் சில வருடங்களுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். பின் வில்லனாக நடிக்க விருப்பம் இல்லை என்று சொன்னால் கூட ஸ்கிரிப்டையாவது கேளுங்கள் என சொல்கிறார்கள். அதிலும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement