ஏர்போர்ட்டில் தாக்கப்பட்ட விவாகரம் – உச்ச நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மேல்முறையீடு. இதான் காரணம்.

0
272
vjs
- Advertisement -

பெங்களூர் ஏர்போர்ட் தாக்குதல் விவகாரம் தொடர்பாக திடீரென விஜய் சேதுபதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்குதல் செய்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடும் உழைப்பினால் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி பயங்கர வில்லனாக மிரட்டி இருந்தார். இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. இதனை அடுத்து இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார். இப்படி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருந்தாலும் திடீரென விஜய் சேதுபதி சுப்ரீம் கோர்ட்டில் பெங்களூர் ஏர்போர்ட் விவகாரம் தொடர்பாக மனு தாக்குதல் செய்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -

பெங்களூர் விவகாரம்:

கடந்த ஆண்டு சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது வழங்கப்பட்டு இருந்தது. இது குறித்து பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில் கடந்த ஆண்டு விஜய் சேதுபதி அவர்கள் பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விமான நிலையத்திற்கு சென்று இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபரால் விஜய் சேதுபதி தாக்கப்பட்ட சம்பவம் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மகா காந்தி அளித்த புகார்:

இது தொடர்பாக விஜய்சேதுபதியை எட்டி உதைத்த மகா காந்தி பேட்டி கொடுத்து இருந்தார். அதில், விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக அவருக்கு வாழ்த்து சொல்ல மகா காந்தி சென்று இருக்கிறார். பிறகு நீங்கள் குரு பூஜையில் கலந்து கொண்டீர்களா? என்று கேட்க, அதற்கு விஜய் சேதுபதி யார் குரு? என்று கேட்டிருக்கிறார். அந்த சமயத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கு. பின் விஜய்சேதுபதியுடன் இருந்தவர்கள் தன்னை தாக்கியதாகவும், அதனால் தான் விஜய் சேதுபதியை உதைத்ததாகவும் மகா காந்தி பேட்டியில் கூறியிருந்தார். இதற்கு விஜய் சேதுபதி தரப்பில் , என்னை தாக்கிய நபர் குடிபோதையில் இருந்தார். அவர் மாஸ்க் அணிந்து இருந்தால் அவர் வெளியே தெரியவில்லை.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி தரப்பில் சொன்னது:

பின் என்னை தாக்கிய நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பிரச்சனை தீர்க்கப்பட்டது. இப்படி மகா காந்தியும், விஜய் சேதுபதியும் தங்களுடைய தரப்பில் இருந்து விளக்கம் அளித்து இருந்தார்கள். மேலும், இந்த சம்பவம் குறித்து பலரும் சோசியல் மீடியாவில் பல கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்கள். இதனை அடுத்து விஜய் சேதுபதியை தாக்கியதாக கூறப்பட்ட மகாகாந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய்சேதுபதி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். பின் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி விஜய் சேதுபதி மனு தாக்கல் செய்து இருந்தார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த விஜய் சேதுபதி:

ஆனால், விஜய் சேதுபதி மனுவிற்கு நீதிமன்றம் தடை விதித்து, மூணு மாதத்தில் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்று கடந்த ஜூலை 29ஆம் தேதி சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது. இதனால் விஜய் சேதுபதிக்கு எதிரான குற்றவியல் வழக்கை விசாரணை செய்து சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவாகரத்தில் விஜய் சேதுபதி நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சமன் அனுப்பி இருந்தார்கள். இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி மேல்முறையீட்டு தாக்கல் செய்திருக்கிறார். இதற்கு நீதிமன்ற தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement