மனைவியுடன் சேர்ந்து,விஜய்சேதுபதி நடத்திய முதல் சுயமரியாதை திருமணம் – அதுவும் யாருக்கு தெரியுமா ?

0
270
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பால் அபார வளர்ச்சி அடைந்தவர் விஜய்சேதுபதி. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் தயாராகி இருக்கிறது.

-விளம்பரம்-

ஒரு நடிகர் ஒரு திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படம் திரைக்கு வருவதே தமிழ் சினிமாவில் பெரும்பாடாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி அவர்கள் அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால, சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியில் தான் முடிவடைந்தது. ஆனால், இவர் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படங்கள் மட்டும் ஹிட் அடித்து விடுக்குறது.

- Advertisement -

விக்ரம் :

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் உலகநாயகன் கமலஹாசன் நடித்த “விக்ரம்” படத்தில் இவர் முக்கிய வில்லனாக நடித்திருந்தார். படத்தின் கடைசியில் அவர் இருக்கும் இடம் வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டு இறந்து விட்டார் என்றிருந்த நிலையில், அவர் சாகவில்லை அந்த இடத்தில் இருந்து தப்பித்து விட்டார் என்றும் கூடிய விரைவில் அடுத்த படங்களில் வர இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படி பட்ட நிலையில் தான் தன்னுடைய மன்ற நிர்வாகி ஒருவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி ரசிகர் மன்றம் :

விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தில் பொதுச்செயலாளராக பொறுப்பு வகிக்கும் குமார் என்பவர் சாதி, மதம் கடந்து பெரியார் வழியில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர்களது திருமணத்தை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவி ஜெசி முன்னிலையில் இன்று காலை சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது.

-விளம்பரம்-

உலகில் சாதி, மதம் கடந்து மனிதர்களை நேசிப்போம் என்ற கருத்தை முன்னிலை படுத்தி அவற்றை ரசிகர்கள் மத்தியில் பரப்பிய விஜய் சேதுபதியை மன்ற செயலாளரும் சாதி, மதம் கடந்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சுயமரியாதை திருமணம் :

இந்த திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் சுற்றம் சூழ, அவர்களின் நண்பர்களுடன் நிறைவாக நடந்து முடிந்தது. இவர்களது திருமணத்தில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவி ஜெசி இருவரும் மணமக்களை மலர் தூவி ஆசிர்வாதம் செய்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement