அல்லு அர்ஜுன் படத்துல நடிக்க முடியாதுனு நேர்ல போய் சொல்லிட்டு வந்தேன் – காரணத்தை சொன்ன விஜய் சேதுபதி.

0
1214
vijaysethupathi
- Advertisement -

சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் தனெக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்தவர் விஜய் சேதுபதி. இவர் ஆரம்பத்தில் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் தான் ஹீரோவாக ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து உள்ளார். இவருடைய நடிப்பும், எதார்த்தமான பேச்சும் தான் மக்கள் மனதில் இடம்பிடிக்க வைத்தது. நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தற்போது தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் ஹீரோ, வில்லன், தாத்தா, திருநங்கை என வெரைட்டியாக நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் குறும்படம், வெப்சிரிஸூலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதியிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவரிடம் நடிகர் அல்லு அர்ஜூனின் `புஷ்பா’ படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு விஜய் சேதுபதி கூறியது, கால்ஷீட் பிரச்னை காரணமாக நடிகர் அல்லு அர்ஜுன் கூட படத்தில் நடிக்க முடியவில்லை.

இதையும் பாருங்க : ட்விட்டரை இப்படி பயன்படுத்தாதே. ரஜினி, விஜய் குறித்து பேசிய மீரா மிதுனுக்கு, சனம் பதிலடி.

- Advertisement -

இயக்குநர் சுகுமாரன் சார் இடம் இது குறித்து நான் நேரில் சென்று சொன்னேன். அல்லு அர்ஜூனும் தெலுங்கில் மிக பெரிய நடிகர். டேட் இல்லாமல் நம்மால் படம் சொதப்பிடக் கூடாது என்று பயமாக இருந்தது. அதே போல் சைரா படத்தின் போதுகூட இந்த பயம் இருந்தது. எல்லாருமே பெரிய பெரிய ஆர்டிஸ்ட். அவர்கள் எல்லோரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டு நான் போக முடியாமல் போயிட்டா நல்லாயிருக்காது. மேலும், தற்போது அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தில் நடிக்க இயக்குனர் என்ன ஆனாலும் பார்த்துக்கலாம் என்று தான் சொல்லி கூப்பிட்டார். ஆனாலும், நான் மறுத்துட்டேன். வாக்கு கொடுத்துட்டு போக முடியவில்லை என்றால் நல்லாயிருக்காது.

அல்லு அர்ஜுன் புஷ்பா

வேலை செய்கிறோம் என்று சொல்லி சொதப்புறதுக்கு பதிலாக பேசமா தள்ளி நிக்கலாம் என்று தோன்றியது. ஆனால், `புஷ்பா’ கதை சூப்பராக இருந்தது. இந்த படத்துக்கு பெரிய டைரக்டர் வேற. இதை மிஸ் பண்ணது ரொம்ப வருத்தமாக இருக்கு என்று கூறினார். தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் புஷ்பா. இந்த படத்தில் வனத்துறை அதிகாரியாக ஒரு முக்கியமான வேடத்தில் தான் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement