சர்ச்சையை ஏற்படுத்திய விஜய் விஜய் சேதுபதியின் பேச்சு. ட்வீட் போட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்.

0
3504
vijayse
- Advertisement -

சினிமாவில் வெற்றி அடைய திறமை ஒரு பக்கம் இருந்தாலும் அதையும் தாண்டி லக்கு என்ற ஒரு விஷயம் ரொம்ப முக்கியம். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு அந்த லக் சரியான முறையில் அமைந்தது. விஜய் சேதுபதி அவர்கள் ஆரம்பத்தில் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தான் முதன் முதலாக ஹீரோவாக ஆனார். அதனைத் தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சேதுபதி, நானும் ரவுடிதான், தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, விக்ரம் வேதா, 96, சூப்பர்டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இவருடைய நடிப்பும், எதார்த்தமான பேச்சும் தான் குறுகிய காலத்திலேயே சினிமா உலகிலும், மக்கள் மனதிலும் இடம்பிடிக்க வைத்தது. விஜய் சேதுபதி அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் வில்லன், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என்று பல துறைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் சன் டிவியில் நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

- Advertisement -

தற்போது இந்த நிகழ்ச்சி குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. விஜய் சேதுபதி அவர்கள் ஒரு ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவியில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி நம்ப ஊரு ஹீரோ. அந்த நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் விஜய் சேதுபதி அவர்கள் கூறியிருப்பது, சாமி அபிஷேகம் செய்வதை காட்டுவார்கள். பின்னர் துணி போட்டு மூடி விடுவார்கள். அப்போது ஒரு குழந்தை ஏன் துணி போட்டு மறைத்து விடுகிறார்கள் என்று தாத்தாவிடம் கேட்டதற்கு.

அதற்கு அந்த தாத்தா குளித்து முடித்து உடை மாற்ற போகிறார்கள் என்று கூறினார். உடனே அந்த குழந்தை ஏன் தாத்தா குளிக்கும் போது காட்டி விட்டு உடை மாற்றுவதை ஏன் மூடி விட்டார்கள் என்று கூறியதாக விஜய் சேதுபதி அந்த வீடியோவில் பேசியிருந்தார். இந்த வீடியோவை ஓர் ஆண்டுகள் கழித்து தற்போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கூறியிருப்பது, கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கோயில் மற்றும் சடங்குகளை புனிதமாக கருதுபவர்கள் எல்லாம் நிச்சயம் இதை பார்த்து வருத்தப்பட்டு இருப்பார்கள்.

-விளம்பரம்-

எந்த மதமாக இருந்தாலும் அந்த மதப் பழக்க வழக்கங்களை கேலி செய்வதற்கு யாருக்கும் தைரியம் இருக்காது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், நீங்கள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால் எந்த அர்த்தத்தில் விஜய்சேதுபதி இப்படிப் பேசினார் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அவர் எதற்காக அதை பேசினார் என்பதை காட்டுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement