ஆசிபாவின் கொடூர மரணம் குறித்து மனம் வருந்த பேசிய விஜய் சேதுபதி….!

0
1272
- Advertisement -

ஆசிபா எனும் பச்சிளம் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த சம்பவம் காஷ்மீரில் நடந்தேறிய சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த படுகொலைக்கு காரணமானவர்களுக்கு ஆதரவாக சில இந்து அமைப்புகள் மற்றும் சிலர் ஆதரவாக பேசிவரும் சம்பவங்களும் மக்களை இன்னும் கொதிப்பதைய வைத்துள்ளன.

-விளம்பரம்-

Asifa-Kuthwa

- Advertisement -

இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் குறித்து பலரும் கருத்து தெரிவித்துவரும் வேளையில் குற்றவாளிகளை கைது செய்துள்ளது காவல்துறை.இந்த சம்பவம் குறித்து தற்போது தமிழ்த்திரையுலகின் முன்னனி நடிகரான விஜய்சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது:

-விளம்பரம்-

காஷ்மீரில் ஆசிபா எனும் சிறுமிக்கு நடந்த கொடூரத்தை நினைத்தாலே ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது. அதனைவிட தவறுசெய்த குற்றாவாளிக்கு ஆதரவாக சிலர் செயல்படுவதை நினைக்கும் போது கோபம் தலைக்கேறுகின்றது. அதிலும் படித்த சிலரே இதுபோன்று செய்வது மிக மிக கொடுமையான ஒரு விசயம். இந்த உலகில் பெண்களை எப்படி மதிக்க கற்றுத்தருகின்றோமோ அதேபோல, பெண் குழந்தைகளையும் மதிக்க கற்று கொடுக்க வேண்டும் நாம்.

Aasifa

இங்கு நம் எல்லோர் வீட்டிலும் அம்மா, சகோதரி, மனைவி, நண்பர்கள் என பெண்கள் இருக்கின்றார்கள்.இதற்கும் மேல் நாம் பெண்களை மதிக்க எப்படி கற்றுத்தருவது என்று எனக்கு புரியவில்லை.

அரசியல்வாதிகள் நமக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதையும் நமக்கு செய்ய மாட்டார்கள். நாம் என்ன ஜாதி, என்ன மதம் போன்ற வக்கிரமான விசயங்களை மட்டும் தொடர்ந்து கற்பித்து கொண்டே இருப்பார்கள்.
நாம் தான் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

vijay-sethubathi

இது போன்ற கொடுமையான குற்றங்களுக்கு எவ்வளவு உயரிய தண்டனை கொடுத்தாலும் போதாது. ஆனால் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இதுபோன்ற கேவலமான செயல்களை ஆதரித்து பேசுவது படுகேவலமான செயல்” என்றார்.

Advertisement