நானும் ரௌடி தான் படப்பிடிப்பில் விக்னேஷ் சிவனுடன் சண்டை போட்ட விஜய் சேதுபதி – சண்டையை தீர்த்து வைத்த நயன்

0
244
- Advertisement -

நானும் ரவுடிதான் பட சூட்டிங்கில் விக்னேஷ் சிவன்- விஜய் சேதுபதி இடையே நடந்திருக்கும் சண்டை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக விஜய் சேதுபதி திகழ்ந்து கொண்டிருக்கின்றார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சினிமா துறையில் பயணித்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியிருந்த படம் நானும் ரௌடி தான். இந்த படத்தில் நயன்தாரா, ஆர் ஜே பாலாஜி, பார்த்திபன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் போது தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ஏற்பட்ட சண்டை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி, முதலில் நான் விக்னேஷ் சிவனிடம் நன்றாக பழகவில்லை.

- Advertisement -

விஜய் சேதுபதி பேட்டி:

பெரிதாக அறிமுகமும் இல்லை. நானும் ரவுடிதான் படத்தினுடைய முதல் நாள் படப்பிடிப்பு நடந்த பிறகு நான் விக்கியை கூப்பிட்டு சண்டை போட்டேன். நீங்கள் எனக்கு நடிப்பு கற்றுத்தர முயற்சிக்கிறீர்கள். நீங்கள் என்னை புரிந்து கொள்ளவில்லை என்று சொன்னேன். அதற்கு பிறகு நான்கு நாட்கள் கழித்து நயன்தாரா என்னிடம், உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டார். காரணம், பாண்டி கேரக்டரில் ரொம்ப கூலா நடிக்கும்படி அவர் என்னிடம் சொன்னார்.

விக்னேஷ் சிவன் குறித்து சொன்னது:

என்னிடம் விக்கி ஸ்கிரிப்டை விவரித்த போது அது அருமையாக இருந்தது. ஆனால், நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள நேரம் தேவைப்பட்டது. ஆனால், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது ஈஸியானது இல்லை என்று விஷ்ணுவிஷால் சொன்னது உண்மைதான். பாண்டி கதாபாத்திரம் அழுதால் பார்ப்பவர்கள் எல்லோருமே சிரிக்க வேண்டும். அந்த அளவிற்கு ஒரு நல்ல பையன். ஆனால், ஒரு ஃபிராடு. முதல் நான்கு நாட்களுக்கு அந்த கதாபாத்திரம் பற்றி எனக்கு புரியவில்லை.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி குறித்த தகவல்:

இதனால் என்னடா என்று என் மனதிற்குள் தோன்றியது. அதற்குப் பிறகு தான் புரிந்து கொண்டு நடித்தேன். காத்துவாக்குல ரெண்டு காதல் மாதிரி படத்தை தொடவே வேண்டாம் என்று இருந்தேன். அவரை புரிந்து கொள்ளவே முடியாது. ஆனால், அவரை நம்பி சென்றால் நிறைய மேஜிக்கை நமக்குள் உருவாக்குவார். நிறைய அனுபவங்கள் கிடைக்கும் என்று கூறியிருந்தார். மேலும், விஜய் சேதுபதி சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தன்னுடைய கடின உழைப்பால் அபார வளர்ச்சி அடைந்தவர். ஆனால், இவர் அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு வந்ததால் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியில் தான் முடிவடைந்தது.

மகாராஜா படம்:

மேலும், இவர் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படங்கள் மட்டும் ஹிட் அடித்து விடுகிறது. தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘மகாராஜா’. இந்த படத்தை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், இருக்கிறார். சிங்கம் புலி, அனுராக் காஷ்யப், அபிராமி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இது விஜய் சேதுபதியின் 50வது படம். நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

Advertisement