விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கேங்கில் நடிக்கும் நடிகர்கள் யார் யார் தெரியுமா ? செம மாஸா இருக்கே.

0
609
vikram
- Advertisement -

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கேங்கில் இந்த நடிகர்கள் எல்லாம் இருக்கிறார்களா? சோசியல் மீடியாவில் வைரலாகும் அப்டேட். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். க்ரிஷ் கங்காதரன் பட்டத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், இந்த படம் 2022ஆம் ஆண்டு கோடையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

ஆனால், இன்னும் அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கேங்கில் இருக்கும் நடிகர்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் First Glance வீடியோ சமீபத்தில் வெளியாகி இருந்தது. இது மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், விக்ரம் படத்தில் கேங்ஸ்டராக விஜய்சேதுபதி நடித்து உள்ளார்.

- Advertisement -

விஜய் சேதுபதியின் கேங்கில் நடித்துள்ள நடிகர்கள் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த கேங்கில் மலையாள நடிகர் செம்பன் வினோத், சம்பத் ராம், டில்லி கணேஷின் மகன் மஹாதேவன், மானாட மயிலாட கோகுல் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

அதோடு இந்த படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருவதாகவும் இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், கமல் மூவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த தகவல்கள் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-
Advertisement